'நமீதா'...ஸ்னேகனுக்கு இப்படியொரு ஆசை!

கிக்கு பட நிறுவனம் தயாரிப்பில், பிரமோத் பப்பன் இயக்கத்தில் நமிதா, பாலா, கலாபவன்மணி நடிக்கும் நில் கவனி என்னை காதலி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா ஃபோர் ஃப்ரேம் பிரிவியூ தியேட்டரில் நடந்தது.
படத்தின் நாயகி நமீதா, நாயகன் பாலா, ஃபெப்சி தலைவர் வி.சி.குகநாதன், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கச் செயலாளர் சிவசக்தி பாண்டியன், பாடலாசிரியர் சினேகன் உட்பட ஏராளமான திரையுலகப் பிரமுகர்கள் பங்கு இந்த விழாவில் பங்கேற்றனர்.
குகநாதன் பேசுகையில், "தமிழ் ரசிகர்களுக்கு சற்று சதைப் பற்றான நடிகைகளை ரொம்பவே பிடிக்கும். அந்த வரிசையில் இப்போது நமிதா மக்களிடம் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறார். படத்தில் அவரைப் போட்டால் அந்தப் படத்துக்கே தனி வேல்யூ வந்துவிடுகிறது..." என்றார்.
பாடலாசிரியர் சினேகன் பேசும்போது,"முன்பெல்லாம் கிராமத்து பெண்கள் பாவாடை தாவணி அணிவார்கள். இப்போதெல்லாம் யாரும் பாவாடை தாவணி அணிவதில்லை. நமிதா அணியும் உடைகளைத்தான் அணிகிறார்கள்.
எனவே நமிதாவுக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் ஒரு படத்திலாவது பாவாடை தாவணி அணிந்து நடிக்க வேண்டும். அதைப் பார்த்து தமிழ்ப் பெண்கள் மீண்டும் பாவாடை தாவணி அணிய ஆரம்பிக்க வேண்டும்.." என்று நமிதாவிடம் வேண்டுகோள் வைத்தார்.
இறுதியில் நமிதா இப்படிப் பேசினார்:
'பாவாடை தாவணி அணிந்து நடிக்க எனக்கும் ரொம்ப ரொம்ப ஆசையிருக்கிறது. அப்படி நடிக்க வாய்ப்பு வந்தால் நிச்சயம் நடிப்பேன்... என்னைப் பொறுத்தவரை நான் நடித்த படங்களின் விழாக்களை தவிர்ப்பதே இல்லை. என்னால் முடிந்த அளவுக்கு எல்லா விழாக்களிலும் கலந்து கொள்கிறேன்.
அது மட்டுமல்ல, நான் நடிக்காத படங்களின் விழாக்களிலும் கூட கலந்து கொண்டு வருகிறேன். அதே சமயம் நடிகைகளுக்கும் கலந்து கொள்ள முடியாத சூழல் இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். தவிர்க்க முடியாமல் கலந்து கொள்ள முடியாமல் போகும் நேரங்களில் தயாரிப்பாளர்கள் அட்ஜஸ்ட் செய்து கொள்ள வேண்டும்' என்றார்.


Click it and Unblock the Notifications











