twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆறில் ஒன்றாக பாலிவுட்டில் அறிமுகமாகும் பார்வதி

    |

    Parvathy Omanakuttan
    படத்தில் ஹீரோயினாக வந்து ஆட்டம் போட்டுவிட்டு போகும் மற்ற மிஸ் இந்தியாக்களை போல நானில்லை. என் வழி தனி வழி என்கிறார் பார்வதி ஓமனக்குட்டன்.அதை செயல்படுத்தியும் இருக்கிறார்.

    தனது 'ஸ்டார் இமேஜை' பற்றி சிறிதும் கவலைப்படாமல் தனது பாலிவுட் அறிமுகப்படத்தில் ஆறு ஹீரோயின்களில் ஒருவராக களமிறங்குகிறார்.

    ஹீரோவே இல்லாத இந்த படத்தை விஷால் ஆர்யன் சிங் இயங்குகிறார்.

    இது குறித்து பார்வதி கூறுகையில்,

    மனம் சொல்வதை கேட்க கூடியவள் நான். கவர்ச்சிகரமான உலகின் ஒரு பகுதியாகவே நான் வாழ விரும்புகிறேன். அழகு ராணியாக இருப்பதே எனக்கு பிடிக்கும். அதனால் தான் அழகி போட்டிகளில் பங்கேற்றேன். அழகி போட்டிகள் இல்லாவிட்டால் நான் என்னவாகியிருப்பேன் என்பது எனக்கே தெரியவில்லை.

    உலக அழகி போட்டிக்கு தேர்வான சமயத்திலிருந்தே பல படங்களில் நடிக்க அழைத்தார்கள். ஆனால், எனக்கு கதை பிடிக்கவில்லை. ஆனால், இந்த படத்தின் கதை எனக்கு மிகவும் பிடித்து விட்டது.

    இந்த படத்தில் வெவ்வேறு விதமான சூழ்நிலைகளில் வாழும் ஆறு பெண்கள் எப்படி ஒரே இடத்தில் சந்திக்கின்றனர். அவர்களை சுற்றி இந்த படம் செல்கிறது.

    என்ன செய்தாலும் செய்தியாகிவிடுகிறது...

    படப்பிடிப்பின்போது தெரியாமல் அந்த பக்கமாக சென்ற ஒருவர் மீது என் கால் பட்டுவிட்டது. அது ஒரு விபத்து தான். ஆனால், மக்கள் நான் யாரையோ அடித்து உதைத்து விட்டதாக பேசி கொள்கின்றனர். பிரபலங்களுக்கு கிடைக்கும் பரிசுகளில் இதுவும் ஒன்று. அவர்கள் என்ன செய்தாலும் அது செய்தியாகி விடுகிறது.

    எனது பெற்றோர்கள் என்னிடம் உனக்கு ஆதரவாக 100 பேர் கருத்து தெரிவித்தால், எதிர்த்து விமர்சிப்பவர்கள் 200 பேர் இருப்பார்கள் என அறிவுரை வழங்கியுள்ளனர். அதை நான் எப்போதும் நினைவில் வைத்திருக்கிறேன்.

    எனக்கு கடவுள் மீது அதிக நம்பிக்கையுள்ளது. நான் விரும்பும் போதெல்லாம் கடவுளுடன் பேசுவேன். அந்த பேச்சு எனக்கு அமைதி தேடி தரும். ஆனால், சாதி மற்றும் மதத்தில் எனக்கு நம்பிக்கையில்லை. என்னை பொறுத்தவரை நமக்கு மேலிருந்து நம்மை காப்பவர் தான் கடவுள்.

    உலக அழகி போட்டியில் முதலிடத்தை ரஷ்ய அழகியிடம் பறிகொடுத்தது பற்றி நான் சிறிதும் கவலைப்படவில்லை. ஆனால், நூலிழையில் பட்டம் போனது சிறிது கடினமாக தான் இருந்தது. இருந்தாலும் கடவுள் எனக்கு என்று தனியாக எதாவது வைத்திருப்பார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது.

    மகுடம் சூட்டி கொள்வது மட்டும் தான் வெற்றி பெற்றதற்கு அர்த்தமாகாது. மக்களின் மனங்களில் இடம்பிடித்தாலே போதும் என்றார்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X