ஏகனில் பம்பாய் அழகி பியா!

பில்லாவுக்குப் பிறகு திடீரென தாடி விட்டிருந்த அஜீத், இப்போது அத்தனையையும் காலி செய்து விட்டா அல்டாப் ஆக மாறியுள்ளார்.
முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்து விறுவிறுப்பாக தயாராகி வரும் 'ஏகன்' படத்தில் கூடவே புதுப்புது மாற்றங்களும் செய்யப்பட்டு வருகின்றன.
அய்ங்கரன் தயாரிக்கும் இந்தப் படத்தில் முதலில் நயன்தாரா மட்டும்தான் நாயகி. இப்போது இன்னொரு போனஸாக, பியா என்ற மும்பை அழகியைச் சேர்த்திருக்கிறார்கள். இவர் மும்பையின் பிரபலமான மாடல் அழகியாம். மிரட்டும் அழகுடன், உருட்டலாக இருக்கிறார் பியா.
காதல், சென்டிமெண்ட், ஆக்ஷன் என மிரட்டலாகத் தயாராகும் 'ஏகனி'ல், அஜித்தின் அப்பாவுக்கு இரு மனைவிகளாம். இதில் மூத்த மனைவியின் மகன்தான் அஜித். இரண்டாவது மனைவியான சுகாசினியின் மகனாக நவ்தீப் வருகிறாராம்.
பியாவைப் பிடித்துப் போட்டிருப்பது நவ்தீப்புக்கு ஜோடியாக நடிக்கத்தானாம். ஆனால் அஜீத்துடனும் சில காட்சிகளில் வருகிறாராம் இந்த பியா.


Click it and Unblock the Notifications











