'ஜெய் ஹோ': ரஹ்மானுக்கு ரூ.1.5 கோடி!

ஆஸ்கர் விருதுகளை வென்ற இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான், கேரள மாநிலம் கோழிக்கோட்டில் சமீபத்தில் இசை நிகழ்ச்சி ஒன்று நடத்தினார்.
ஜெய் ஹோ எனும் பெயரில் நடந்த இந்த நிகழ்ச்சியில் ரூ.7 கோடிக்கு டிக்கெட்டுகள் விற்கப்பட்டன. விளம்பரதாரர்கள் செலுத்திய கட்டணத்தைச் சேர்த்தால் ரூ.10 கேடியைத் தாண்டும் என்கிறார்கள்.
சர்வதேச கேரள அமைப்பு நடத்திய இந்த நிகழ்ச்சியி, பங்கேற்ற ரஹ்மானுக்கு கட்டணமாக ரூ.1.5 கோடி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் வருவாயில் ஒரு பகுதி எச்ஐவி பாதித்த குழந்தைகளின் நலனுக்காகவும், இன்னொரு பகுதி இந்தக் குழந்தைகளின் நலனுக்காக பெரிய பள்ளிக்கூடம் ஒன்றைக் கட்டுவதற்கும் செலவிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த இரு ஆண்டுகளுக்குள் இந்தப் பள்ளி கட்டி முடிக்கப்படும் என்று நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர் அப்துல் வஹாப் கூறினார்.
Comments


Click it and Unblock the Notifications