பிரபு மகள் திருமணம்: ரஜினி - கமல் வாழ்த்து!

மணமக்களை அரசியல் தலைவர்கள், நடிகர்-நடிகைகள், தொழில் அதிபர்கள் நேரில் வந்து வாழ்த்தினார்கள்.
ரஜினிகாந்த், மனைவி லதாவுடன் வந்து வாழ்த்தினார். கமல்ஹாசன், மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், சிவக்குமார், அஜித்குமார், ஜெயராம் ஆகியோரும் வாழ்த்தினார்கள்.
நேற்று மாலை நடந்த திருமண வரவேற்புக்கு அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா வந்திருந்து மணமக்களை வாழ்த்தினார்.
அமைச்சர்கள் அன்பழகன், மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தினந்தந்தி அதிபர் டாக்டர். பா. சிவந்தி ஆதித்தன், மாலைமலர் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணிய ஆதித்தன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.
இன்றைய திருமணத்தில் மணமக்களை வாழ்த்தியவர்கள் விவரம்:
நடிகர்கள் சத்யராஜ், அருண் விஜய், திலீப், கார்த்தி, பிரசன்னா, வையாபுரி, கே. ராஜன், விஜயகுமார், எழுத்தாளர் சோ, நடிகைகள் கே.ஆர். விஜயா, மஞ்சுளா, ராதா, மனோரமா, வனிதா, சுகன்யா, சுஹாசினி. டைரக்டர்கள் மணிரத்னம், சரண், எஸ்.பி. முத்துராமன், பி. வாசு, தயாரிப்பாளர்கள் ஏ.வி.எம். சரவணன், சத்யஜோதி தியாகராஜன், பின்னணி பாடகர் ஜேசுதாஸ், எம்.ஜி.ஆர். கழகத் தலைவர் ஆர்.எம். வீரப்பன்


Click it and Unblock the Notifications











