பிஆர்ஓ நிகிலுக்கு ரஜினி தந்த பரிசு மோதிரம்

சினிமா தகவல்களை ஒரு போட்டோ, துண்டுப் பேப்பரில் மற்றவர்கள் தந்து கொண்டிருந்த நேரத்தில், சிடி, இமெயில் வழியாக அனுப்பி திரையுலகின் பிஆர் போக்கையே மாற்றியவர் இவர்.
தமிழ் சினிமாவின் இரு பெரும் சிகரங்களான ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருக்குமே ஒரே சமயத்தில் பிஆர்ஓவாகப் பணியாற்றுபவர். எந்திரனுக்கும் இவர்தான் பிஆர்ஓ.
நிகிலுக்கு சமீபத்தில் இவருக்கு ரஜினி ஒரு விலை மதிப்பில்லாப் பரிசளித்துள்ளார். அது, பாபா முத்திரை பதித்த தங்க மோதிரம்.
இதுகுறித்து நிகில் கூறுகையில்,
என் வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் இதுதான். இந்த திரைத்துறையில் யாரைப் பார்த்து, யாரை முன்மாதிரியாகக் கொண்டு நுழைந்தேனோ, அவர் கையாலேயே பரிசு வாங்கியது என் வாழ்நாளில் மறக்கமுடியாத நிகழ்வு.
அவர், இந்தியத் திரையுலகின் அடையாளம்… கடின உழைப்பு மற்றும் மனிதாபிமானத்துக்கே உதாரணமான சூப்பர் ஸ்டார் ரஜினி.
அவருடனும் அவரது குடும்பத்துடனும் பணியாற்றியதற்காக ரஜினி தந்ததுதான் இந்த பாபா முத்திரை மோதிரம்.
மனதளவில் சற்றே நான் தளர்வுற்ற நேரத்தில், 'இதோ உன் உழைப்புக்கான பரிசு. நம்பிக்கையுடன் எதைப் பற்றியும் கவலைப் படாமல் மேலே செல்' என்று இந்த மோதிரம் மூலம் ரஜினி கூறியதாகவே நான் எடுத்துக் கொண்டேன்.
அவர் தந்த இந்த பரிசு, என் மனதுக்கு புத்துணர்ச்சியையும், இன்னும் வேகமாக செயல்படும் ஆற்றலையும் தந்துள்ளது. ரஜினியைப் போன்ற ஒரு மாபெரும் மனிதருடன் பணியாற்றுகிறோம் என்பதே என்னை எல்லையில்லா பரவசத்தில் ஆழ்த்துகிறது என்றார்.


Click it and Unblock the Notifications











