70 படங்களுக்கு ரூ.4.90 கேடி மானியம்

By Staff

2005 மற்றும் 2006ம் ஆண்டுகளில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான 70 தமிழ்ப் படங்களுக்கு மொத்தம் 4 கோடியே 90 லட்ச ரூபாய் அரசு மானியம் வழங்கப்படும் என முதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.

குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான தமிழ்த் திரைப்படங்களுக்கு அரசு மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2005ம் ஆண்டுக்கான மானியங்கள் வழங்க நீதிபதி பொன்.பாஸ்கரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

இந்தக் குழுவில் நடிகை ஸ்ரீபிரியா, சரோஜா தங்கவேலு, செய்தித் துறைச் செயலாளர், வணிக வரித் துறைச் செயலர், எம்ஜிஆர் திரைப்படக் கல்லூரி முதல்வர் ஆகியோர் உறுப்பினர்களாகவும் நியமிக்கப்பட்டனர்.

இந்தக் குழு, 2005 மற்றும் 2006-ம் ஆண்டு குறைந்த செலவில் தயாராகி வெளியான 94 படங்களைப் பார்த்தது.

அவற்றில் 70 படங்களை மானியத்துக்குத் தகுதியுள்ளவையாகத் தேர்ந்தெடுத்தது.

கஸ்தூரி மான், வெற்றிவேல் சக்திவேல், டான்சர், பொன்மேகலை, 6.2, மண்ணின் மைந்தன், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, ஸாரி எனக்குக் கல்யாணமாயிடுச்சி உள்ளிட்ட 34 படங்கள் 2005ம் ஆண்டுக்கான அரசு மானியத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட படங்களாகும்.

தகப்பன் சாமி, இலக்கணம், தூத்துக்குடி, அடைக்கலம், மண், மனதோடு மழைக்காலம், சாசனம், டான்சேரா உள்ளிட்ட 36 திரைப்படங்கள் 2006ம் ஆண்டுக்கான அரசு மானியத்துக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழில் பெயரிடப்பட்ட படங்களுக்கு மட்டுமே வரிவிலக்கு அளிக்கப்படும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை நடைமுறைக்கு வருவதற்கு முன்பாகவே வெளிவந்த படங்கள் இவை என்பதால் ஆங்கில கலப்புள்ள தலைப்புகள் கொண்ட படங்களுக்கும் மானியம் கிடைத்திடும் வகையில் அரசாணை தளர்த்தப்பட்டுள்ளதாக தமிழக அரசு செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.

மேலும் இனிவரும் காலங்களில் தமிழில் பெயரிடப்படும் படங்களுக்கு மட்டுமே மானியம் வழங்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X