'பாடி'க்கு சல்மான் - 'ஜாலி'க்கு ஷாருக்!

சினோவாட் என்ற மார்க்கெட்டிங் ரிசர்ச் நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில்தான் இந்த முடிவு வெளியாகியுள்ளது.
சிறந்த சுகாதார ரோல் மாடலாக சல்மான் கான் தேர்வாகியுள்ளார். அவருக்கு 26 சதவீத வாக்குகளும், அடுத்த இடத்தைப் பிடித்துள்ள ஷாருக் கானுக்கு 24 சதவீத வாக்குகளும், அமிதாப் பச்சனுக்கு 3வது இடமும் கிடைத்துள்ளது.
எப்போதும் சந்தோஷமாக இருந்து அனைவருக்கும் ரோல் மாடலாக திகழும் நடிகர்கள் பட்டியலில் ஷாருக் கான் முதலிடத்தைப் பிடித்துள்ளார். அடுத்த இடத்தை சல்மான் பிடித்துள்ளார். அக்ஷ்ய்குமாருக்கு 4வது இடம் இதில்.
நாடு முழுவதும் உள்ள எட்டு பெருநகரங்களைச் சேர்ந்த 25 முதல் 45 வயதுக்குட்பட்டோரிடையே இந்த கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது.
Comments


Click it and Unblock the Notifications