ஆட்டோ ஓட்டிய சல்மான்

அதிரடி பார்ட்டியான சல்மான் கானுக்கு கார்களை வேகமாக ஓட்டிச் செல்வது பிடித்தமான விஷயம். அதேபோல பைக்குகளிலும் அவ்வப்போது படு வேகமாக சவாரி செய்வதும் வழக்கம். ஆனால் கடந்த வெள்ளிக்கிழமை ஆட்டோவில் சவாரி அடித்து அசத்தினார் சல்மான்.
சல்மானும், காதலி காத்ரீனா கைபும், மும்பையில் உள்ள ஒரு ஸ்டார் ஹோட்டலுக்கு டின்னருக்குச் சென்றனர். அங்கு தனியான ஒரு இருக்கையை தேர்வு செய்தனர்.
பின்னர் சல்மான் வோட்கா ஆர்டர் செய்தார். ஐந்து, ஆறு பெக் வரை உள்ளே போனது. ஆனால் காத்ரீனா குடிக்கவி்ல்லை. மாறாக வெறும் சாப்பாட்டோடு நிறுத்திக் கொண்டார்.
இதையடுத்து இருவரும் ஜோடியாக வெளியே வந்தனர். அப்போது திடீரென ஆட்டோ ஓட்ட வேண்டும் என்ற ஆசை வந்தது சல்மானுக்கு. இதையடுத்து அங்கிருந்த ஒரு ஆட்டோவைப் பிடித்து டிரைவரிடம் பேசி ஆட்டோவை வாடகைக்கு எடுத்தார்.
ஆட்டோ டிரைவரை, தனது காருக்கு அனுப்பினார். ஆட்டோ டிரைவர் காரின் முன் சீட்டில் உட்கார்ந்து கொள்ள காத்ரீனா காரை ஓட்டினார்.
சல்மான் கான் ஆட்டோவை படு லாவகமாக ஸ்டார்ட் செய்து தனது வீடு வரை படு ஜாலியாக ரைட் விட்டார். பின்னால் காத்ரீனா காரில் தொடர்ந்து வந்தார்.
வீடு வந்து சேர்ந்ததும் ஆட்டோவை டிரைவரிடம் ஒப்படைத்து கை நிறையப் பணத்தையும் கொடுத்து சந்தோஷப்பட்டுள்ளார் சல்மான்.
சும்மா சொல்லக் கூடாது, என்னை விட நன்றாகவே ஆட்டோ ஓட்டினார் சல்மான் என்று பெருமையுடன் கூறினார் அந்த ஆட்டோ டிரைவர்.


Click it and Unblock the Notifications