ஸ்னிக்தாவும் ஓகே சொல்லியாச்சு!

இருக்கிற நாயகிகளில் பலர் 6 பேரில் ஒருவரா.. ம்ஹூம் நான் தனியாத்தான் நடிப்பேனாக்கும் என முகத்தை வெட்டிக் கொண்டு போக, கிடைத்த நாயகிகளை எல்லாம் வளைத்துப் போட ஆரம்பித்துவிட்டார் இயக்குநர் ஷக்தி சிதம்பரம் தனது ராஜாதி ராஜாவுக்காக.
அப்படி அவர் லேட்டஸ்டாக வளைத்திருப்பது கத்தாழ கண்ணழகி ஸ்னிக்தாவை. சந்தியா வேண்டாமென்று மறுத்த வேடத்தில் இப்போது ஸ்னிக்தாதான் நடிக்கப் போகிறார்.
இப்போது மிஷ்கினுக்கு ஜோடியாக நந்தலாலாவில் நடித்து வரும் ஸ்னிக்தா, அந்த ஷூட்டிங் முழுமையாக முடிந்த பிறகுதான் இந்தப் படத்துக்கு வருவேன் என்ற ஒரேயொரு நிபந்தனையை மட்டும் விதித்துள்ளாராம்.
லாரன்ஸ் நாயகனாக நடிக்கும் இந்த ராஜாதி ராஜாவில் ஸ்னிக்தா தவிர, மீனாட்சி, காம்னா, சமிக்ஷா, மும்தாஜ் மற்றும் கிரண் நடிப்பது தெரியும்தானே...
Comments


Click it and Unblock the Notifications