'பராசக்தி' பாடல்கள் ரீமிக்ஸ்!

By Staff

Parasakthi
57 ஆண்டுகளுக்கு முன் முதல்வர் கருணாநிதி படைத்த சமூக சீர்திருத்தப் படம் பராசக்தி. இந்தப் படத்தின் வசனங்கள் மட்டுமல்ல, பாடல்களும் சமூகப் புரட்சியை நிகழ்த்தின.

தமிழ்த் திரையுலகின் முக்கியமான மைல்கல் இந்தப் படம் என்றாலும் மிகையல்ல. கிட்டத்தட்ட 57 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் படத்தின் பாடல்களை மட்டும் ரீமிக்ஸ் செய்து, 'கலைஞர் போற்றுதும் கலைஞர் போற்றுதும்' என்ற தலைப்பில் உருவாக்கப்பட்ட இந்தப் பாடல்கள் வெளியிடப்பட்டன.

கருணாநிதியி 86-வது பிறந்த நாள் விழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

பராசக்தியில் அவர் எழுதிய பாடல்களை தனது குழுவை வைத்து மேடையில் நடன நிகழ்ச்சியை நடத்தினார் பிரபல நடன இயக்குநர் கலா.

இந்த நிகழ்ச்சி கலைவாணர் அரங்கில் நடந்தது. இரவு 9 மணிக்கு இந்த நிகழ்ச்சியைக் காண வந்த முதல்வர் கருணாநிதி தொடர்ந்து, பாடல்கள்- நடனங்களைப் பார்த்து ரசித்தார்.

பராசக்தி படத்தைத் தயாரித்த ஏவிஎம் நிறுவனத்தின் சரவணன் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

பின்னர் இந்தப் பாடல்கள் அடங்கிய சிடிக்களை துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட அதை ஏவிஎம் சரவணன் பெற்றுக் கொண்டார்.

பின்னர் திண்டுக்கல் பழனி குழுவின் தப்பாட்டம் மற்றும் ஏகே பழனிவேலின் தவில் கச்சேரியும் நடத்தப்பட்டது. அனைத்து நிகழ்ச்சிகளையும் முதல்வர் இறுதிவரை அமர்ந்து ரசித்தார்.

அமைச்சர்கள் துரைமுருகன், பரிதி இளம்வழுதி, கேபிபி சாமி மற்றும் தமிழரசி ஆகியோரும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X