அவன் இவன் இப்போது 'சன்' வசம்!

விஷால், ஆர்யா மற்றும் ஆர்கே நடிக்கும் அவன் இவன் இந்த கோடை ஸ்பெஷலாக வெளி வருகிறது. இந்தப் படம் குறித்து ரசிகர்களிடையே பெரும் எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
படப்பிடிப்பு முடிந்து, போஸ்ட் புரொடக்ஷன் பணிகளும் நிறைவடையும் நிலையில் உள்ளன. கல்பாத்தி அகோரத்தின் ஏஜிஎஸ் தயாரிப்பாக உருவாகியுள்ள அவன் இவனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கி வெளியிடப் போவதாக ஏற்கெனவே செய்திகள் வெளியாகின.
இப்போது அந்த செய்தி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மாப்பிள்ளை, எங்கேயும் காதல் ஆகிய படங்களுக்குப் பிறகு, பாலாவின் அவன் இவன் வெளியாகும் எனத் தெரிகிறது.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார் இந்தப் படத்துக்கு.


Click it and Unblock the Notifications











