சன் வசம் நினைத்தாலே இனிக்கும்

ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் தயாரித்துள்ள படம் நினைத்தாலே இனிக்கும். இதில் பிருத்விராஜ், ஷக்தி, கார்த்திக் குமார், ப்ரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர்.
குமாரவேலன் இயக்கியுள்ள இப்படம் இப்போது சன் பிக்சர்ஸ் வசம் வந்துள்ளது. படத்தை வாங்கியுள்ள சன் பிக்சர்ஸ், செப்டம்பர் மாதம் படத்தை திரைக்குக் கொண்டு வருகிறது.
ஏற்கனவே சன் பிக்சர்ஸ் வாங்கி வெளியிட்ட காதலில் விழுந்தேன், தெனாவெட்டு, திண்டுக்கல் சாரதி, தீ, அயன், மாசிலாமணி ஆகிய படங்கள் ஹிட் ஆகின. அதிலும் அயன் சூப்பர் டூப்பர் ஹிட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது.
சன் பிக்சர்ஸ் நிறுவனம், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் எந்திரன் படத்தை முதல் முறையாக சொந்தமாக தயாரித்து வருவது நினைவிருக்கலாம்.
Comments
சன் பிக்சர்ஸ் சினிமா தமிழ் நினைத்தாலே இனிக்கும் ப்ரியா மணி cinema ninaithale inikkum priya mani sun pictures


Click it and Unblock the Notifications