சிம்ரன்-தேவயானி சண்டை தீர்க்கும் சுந்தர்!

இந்த சண்டை சினிமாவுக்காக... சுந்தர் சி நாயகனாக நடிக்க, அவருடன் சிம்ரன் ஜோடி போடும் இந்த ஐந்தாம் படை, முழுக்க முழுக்க நெல்லை மாவட்டப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளதாம்.
இயக்குநர் பத்ரி கூறுகையில்,
ஸ்டார்ட்... கேமரா... ஆக்ஷன் என எல்லோரையும் உருட்டி மிரட்டிக் கொண்டிருந்த இயக்குநர் சுந்தர் சி இன்று பக்கா ஆக்ஷன் நாயனாக மாறியிருக்கிறார்.
சிம்ரன்- தேவயானி என்ற இரண்டு பெண்களுக்குள் நடக்கும் சண்டை, அதனால் இரு குடும்களில் ஏற்படும் பிரச்சனை, அதை நாயகன் சுந்தர் சி எப்படி தீர்த்து வைக்கிறார் என்பதுதான் இந்தப் படம். பார்க்க குடும்பக் கதை போலத் தெரிந்தாலும்,சுந்தர் சியின் ஆக்ஷன் இமேஜூக்கு (?!) தீனி போடும் வகையில் இந்தப் படம் அமையும்.
படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது. இம்மாத இறுதியில் படத்தை வெளியிட முடிவு செய்திருக்கிறோம் என்றார் பத்ரி.


Click it and Unblock the Notifications