தபேலா மாஸ்ட்ரோ ஜாகி்ர் உசேன் கிராமி விருதுக்குப் பரிந்துரை

By Staff

Zakir Hussain
மும்பை: ஏ.ஆர்.ரஹ்மானைத் தொடர்ந்து தபேலா மாஸ்ட்ரோ ஜாகிர் உசேனும், கிராமி விருதுக்குப் பரி்ந்துரைக்கப்பட்டுள்ளார்.

52வது கிராமி விருதுகளுக்கான பரிந்துரைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

ஸ்லம்டாக் மில்லியனர் படத்துக்காக ஏ.ஆர்.ரஹ்மான் 2 பிரிவுகளில் கிராமி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் கிளாசிகல் கிராஸ்ஓவர் ஆல்பம் பிரிவில் தபேலா மாஸ்ட்ரோ ஜாகிர் உசேன் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

அவர் உருவாக்கிய தி மெலடி ஆப் ரிதம் என்ற ஆல்பத்திற்காக ஜாகிர் உசேனின் பெயர் கிராமி விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

லியோனார்ட் ஸ்லாட்கின், பி பலா பிளக், எட்கர் மேயர் மற்றும் ஜாகிர் உசேன் ஆகிய கலைஞர்கள் இந்த ஆல்பத்தில் பங்கு பெற்றுள்ளனர்.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் தற்கால உலக இசை ஆல்பத்திற்கான கிராமி விருதை ஜாகிர் உசேன் வென்றார் என்பது நினைவிருக்கலாம்.

அதேபோல, கடந்த 1992ம் ஆண்டு ஹுசேனும், மிக்கி ஹார்ட்டும் இணைந்து உருவாக்கிய பிளானட் டிரம் என்ற ஆல்பத்திற்கு கிராமி விருது கிடைத்தது.

52வது கிராமி விருது வழங்கும் நிகழ்ச்சி லாஸ் ஏஞ்செல்ஸின் ஸ்டேபிள்ஸ் மையத்தில் அடுத்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி கோலாகலமாக நடைபெறவுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X