பையா படம் வெளியாகத் தடை!

வருகிற பொங்கலுக்கு கார்த்தி நடித்த ஆயிரத்தில் ஒருவன் மற்றும் பையா படம் இரண்டும் ஒரே நேர்த்தில் வெளியாகவிருந்தன. இதனால் விநியோகஸ்தர்கள் அதிருப்திக்குள்ளானார்கள்.
ஒரே நேரத்தில் இரண்டு படங்களும் வந்தால் வியாபாரம் பாதிக்கும் என்று தெரிவித்தனர். கார்த்தியும் இதை விரும்பவில்லை.
ஆயிரத்தில் ஒருவன் படத் தயாரிப்பாளர் ரவீந்திரன் கூறும்போது, 'பருத்திவீரன் படம் ரிலீசான உடனேயே ஆயிரத்தில் ஒருவன் படத்துக்கு கார்த்தி ஒப்பந்தம் செய்யப்பட்டார். எனவே இந்த படத்துக்கு தான் முன்னுரிமை அளிக்க வேண்டும்' என்றார்.
பையா பட இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான லிங்குசாமியோ, 'தனது பையா படம் முடிந்து ரிலீசுக்கு தயாராக இருப்பதால் உடனே வெளியிட வேண்டும். இல்லாவிட்டால் நஷ்டம் ஏற்படும்' என்றார்.
இந்நிலையில் இந்த விஷயத்தில் தலையிட்ட தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், பையா படத்தை தள்ளி வைக்குமாறும், பொங்கலுக்கு ஆயிரத்தில் ஒருவன் மட்டுமே ரிலீசாக வேண்டும் என்றும் கூறிவிட்டது.


Click it and Unblock the Notifications











