நாளை டிவி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம்

By Staff

Malliga-Sun TV
இலங்கை தமிழர் படுகொலையைக் கண்டித்து நாளை டிவி நடிகர்-நடிகைகள் உண்ணாவிரதம் நடத்துகின்றனர்.

இது குறித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு தலைவர் விடுதலை, பொதுச் செயலாளர் வசந்த், செயலாளர் சிவன் சீனிவாசன் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

இலங்கையில் அப்பாவி தமிழர்கள் கொல்லப்படுவதை கண்டித்து தமிழ்நாடு சின்னத்திரை கலைஞர்கள் கூட்டமைப்பு சார்பில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே உண்ணா விரதப்போராட்டம் நடைபெறும். காலை 9 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.

அனைத்து டிவி தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர், நடிகைகள், எழுத்தாளர்கள் மற்றும் டிவியில் பணிபுரியும் அனைத்து கலைஞர்களும் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க வேண்டும்.

இத்துடன் சின்னத் திரையில் பணிபுரியும் கலைஞர்கள் அனைவரும் தங்களது ஒருநாள் ஊதியத்தை முதல்வர் அறிவித்துள்ள இலங்கை தமிழர் நிவாரண நிதி பெயரில் காசோலையாக வழங்க வேண்டும்.

சின்னத்திரை நடிகர் சங்கம், எழுத்தாளர் சங்கம், இயக்குனர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் உறுப்பினராக உள்ள அனைவரும் கண்டிப்பாக கலந்து கொள்ள வேண்டும்.

இந்தப் போராட்டத்தை பாஜக எம்.பி. திருநாவுக்கரசர் துவக்கி வைக்கிறார் என்று கூறப்பட்டுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X