twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பழிச்சொல் தீர்த்த பஞ்சாமிர்தம்!-வாலி

    By Staff
    |

    Panchamirtham Audio Release
    பெரியவர்கள் ரசிக்கும் பாடல்களை மட்டுமே எழுதுகிறேன் என்ற நீண்ட நாள் பழிச்சொல்லைப் போக்கியிருக்கிறது பஞ்சாமிர்தம் படப் பாடல்கள் என்றார் கவிஞர் வாலி.

    கவியரசர் கண்ணதாசன் காலத்திலிருந்து தமிழ் திரையிசைத் துறையில் ஜாம்பவானாகத் திகழ்பவர் கவிஞர் வாலி.

    விரைவில் வெளியாகவிருக்கும் அபிராமி ராமநாதனின் பஞ்சாமிர்தம் படத்துக்கு இவர்தான் பாடல்கள் எழுதியுள்ளார். சுந்தர் சி பாபு இசையமைத்துள்ளார்.

    இந்தப் படத்தின் பாடல் வெளியீட்டு விழா நேற்று அமிராமி மெகா மாலில் நடந்தது.

    கனிமொழி எம்பி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பாடல்களை வெளியிட்டார். முதல் சிடியை பிரசாத் ஸ்டுடியோ அதிபர் ரமேஷ் பிரசாத் பெற்றுக் கொண்டார்.

    விழாவில் பங்கேற்ற கவிஞர் வாலி கூறியதாவது:

    பெரியவர்கள் மட்டுமே ரசிக்கும் பாடல்கள் எழுதுகிறேன் என்று என் மீது நீண்டநாளாக ஒரு பழிச் சொல் உண்டு. அதைத் துடைப்பதற்கான சந்தர்ப்பமும், சூழலும் அமையாமல் இருந்தது. இன்றைக்கு அந்த சந்தர்ப்பம் வாய்த்திருக்கிறது. பஞ்சாமிர்தம் படத்துக்கு பாடல் எழுத வாய்ப்பளித்ததன் மூலம், என் மீதான அந்தப் பழிச்சொல், வசையைத் துடைத்திருக்கிறார் படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன்.

    இப்படத்தில் நான் எழுதிய 'தான தந்தானா, சந்தங்களின் தேனா...' பாடலுக்கு தமிழ்நாடு முழுவதும் 80 பள்ளிகளிலிருந்து வந்த மாணவ, மாணவிகள், குழந்தைகள் நடனம் ஆடி பரிசுகள் வென்றுள்ளனர்.

    குழந்தைகளும் ஆடும்படியான பாடல் எழுத முடியும் என்று இதன் மூலம் எனக்கு பாராட்டு கிடைக்கச் செய்திருக்கிறார்கள். 'ஓடுகிற படம்தான் பெரிய படம். ஓடாத படம் சிறிய படம்...' என்றார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர். அந்த வகையில் இப்படம் பெரிய படமாக அமையும் வகையில் கணக்கு போட்டு எடுத்திருக்கிறார்கள், என்றார் வாலி.

    முன்னதாக 'தான தந்தானா, சந்தங்களின் தேனா...' பாடலுக்கு நடனமாடி வெற்றி பெற்ற கோவை ஸ்டேன்ஸ் ஆங்கிலோ இந்திய பள்ளி (முதல் பரிசு ரூ. 1 லட்சம்), சென்னை டான் பாஸ்கோ (இரண்டாம் பரிசு ரூ. 75 ஆயிரம்), சென்னை ஷ்ரைன் வேளாங்கண்ணி பள்ளி (மூன்றாவது பரிசு ரூ.37500) மற்றும் செயிண்ட் பிரிட்டோஸ் அகாடமி (மூன்றாம் பரிசு ரூ. 37500) குழந்தைகளுக்கு ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.

    இவற்றைத் தவிர 13 பள்ளிகளுக்கு ஆறுதல் பரிசாக தலா ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டது. பரிசுகளையும் வெற்றிக் கோப்பைகளையும் கனிமொழி எம்பி வழங்கினார்.

    பிலிம்சேம்பர் தலைவர் கே.ஆர்.ஜி., தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் ராம நாராயணன், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன், தயாரிப்பாளர்கள் கலைப்புலி எஸ்.தாணு, சத்யஜோதி தியாகராஜன், ஏஎல் அழகப்பன், பிஎல் தேனப்பன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    படத்தின் தயாரிப்பாளர் அபிராமி ராமநாதனின் மனைவி நல்லம்மை ராமநாதன், மகன் ஆர் சிவலிங்கம், மகள் மீனாட்சி பெரிய கருப்பன் ஆகியோர் வரவேற்றனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X