வேதா: ஒரு பாசப் போராட்டம்!

தந்தைக்கும் மகனுக்கும் உள்ள கருத்து வேற்றுமைகளில் வெளிப்படும் உணர்ச்சி போராட்டங்களை நாடகத்தன்மை இல்லாமல் அதிவேக திரைக்கதை அமைப்புடன் சித்தரிதுள்ளார்களாம் இந்தப் படத்தில்.
காலாட்படை என்ற படத்தை இயக்கிய ஜே.ரமேஷின் அடுத்த முயற்சிதான் இந்தப் படம். விவேக், அஷ்வதி, வின்சென்ட்ராய், ப்ரியா, சோனியா, கிச்சா, ஜாய் மற்றும் ஜான்பால் நடித்துள்ள இந்தப் படத்தை ஜான்பால் தயாரித்துள்ளார்.
தலைவாசல், அமராவதி போன்ற படங்களுக்கு சிறந்த இசையைத் தந்த பாலபாரதி மீண்டும் களத்தில் குதித்துள்ளார் இந்தப் படத்தின் மூலம். இவரது பின்னணி இசையமைப்பு நன்றாக இருக்கும் என இசைஞானி இளயராஜாவே பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எல்லா வயதினரும் ரசிக்கும் வகையில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் இந்தப் படத்தை எடுத்திருப்பதாகக் கூறுகிறார் ரமேஷ்.


Click it and Unblock the Notifications











