விஜய், நயன் ரசித்த அஞ்சாதே!

நரேன், பிரசன்னாவின் வித்தியாசமான நடிப்பில் உருவாகி வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் படம் அஞ்சாதே. மிஷ்கினின் 2வது படைப்பான இப்படம், பெரும் வெற்றி பெற்றுள்ளது.
இப்படத்ைதப் பார்க்க விரும்பினார் விஜய். தகவல் நரேனுக்குப் போக, உடனடியாக போர் பிரேம்ஸ் பிரிவியூ தியேட்டரில் ஏற்பாடு செய்தார் நரேன். இந்த தகவல் நயனதாராவுக்குப் போக, நானும் வர்றேன் படம் பார்க்க என்று விஜய்யிடம் கேட்டார் நயனதாரா. அதனால் என்னங்கம்மணி, வாங்க பார்க்கலாம் என்று விஜய்யும் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து இருவரும் சேர்ந்து அஞ்சாதே படத்தைப் பார்த்தனர். விஜய்யுடன் அவரது மனைவி சங்கீதா, மகள் திவ்யா சாஷாவும் உடன் வந்தனர். மலையாள இயக்குநர் ஐ.வி.சசி, அவரது மனைவியும் நடிகையுமான சீமா ஆகியோரும் படத்தைப் பார்த்தனர்.
படத்தைப் பார்த்து முடித்ததும், விஜய் நரேனை வெகுவாக பாராட்டினாராம். இயக்குநர் மிஷ்கினையும் பாராட்டித் தள்ளியுள்ளார். படம் முழுக்க சிறப்பாக நடித்துள்ளீர்கள். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் அசத்தி விட்டீர்கள் என்று நரேனை பாராட்டினாராம் விஜய்.
நயனதாரா படம் ஏற்படுத்திய பிரமிப்பிலிருந்து விடுபட நெடு நேரம் ஆனதாம். படம் குறித்து அவர் கூறுகையில், என்ன ஒரு அருமையான படம். இப்படிப்பட்ட படங்களை நான் ஒருபோதும் மிஸ் செய்வதே இல்லை.
படம் குறித்து நிறைய கேள்விப்பட்டேன். உடனடியாக பார்க்க நினைத்தேன். இப்போது பார்த்து விட்டேன். அருமையான கதை, அட்டகாசமான படம் என்றார் புன்னகையுடன்.
நயனுக்கு, தனது அடுத்த படத்தில் வாய்ப்பு தருவாரா மிஷ்கின்?


Click it and Unblock the Notifications











