லோக்கல் 'ஜாக்கி' விஜய் சிரஞ்சீவி!

இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா பிலிம் சேம்பரில் நடந்தது. இதில் திரையுலகின் மூத்த இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகையர் உள்ளிட்டோர் திரளாக கலந்து கொண்டனர்.
ராம.நாராயணன், சிவசக்தி பாண்டியன், காஜாமொய்தீன், அன்பாலயா பிரபாகரன், சத்யராஜ், எஸ்.வி.சேகர், ராகவா லாரன்ஸ், குஷ்பு, பேரரசு, சிபிராஜ், பரத், ஜெயம் ரவி, ராம்போ ராஜ்குமார் உள்ளிட்டோர் அவர்களில் சிலர்.
படத்தில் இடம் பெற்றுள்ள மூன்று பாடல்கள் விழாவில் திரையிட்டுக் காட்டப்பட்டது. ஒரு சண்டைக் காட்சியும் போட்டுக் காட்டப்பட்டது. அதில் ஜாக்கி சான், ப்ரூஸ் லீ ஸ்டைலில் அதிரடியாக சண்டை போட்டுக் கலக்கியிருந்தார் விஜய சிரஞ்சீவி.
நிகழ்ச்சியில் பேசிய சத்யராஜ் உள்ளிட்டோர் ஜாகுவார் தங்கத்திற்கும் தங்ளுக்கும் இடையிலான நட்பையும், நீண்டகால பழக்கத்தையும் நினைவு கூறி பேசினர்.
இருப்பினும் பேரரசுவின் பேச்சுதான் பன்ச் ஆக அமைந்தது. ஜாக்கி சான் சென்னைக்கு வந்தார், ஆனால் போகவில்லை. விஜய சிரஞ்சீவி ரூபத்தில் அவர் இங்கேயே இருக்கிறார் என்றார் பேரரசு.


Click it and Unblock the Notifications











