பில்லா 2.. அஜீத்துக்கு அனுஷ்கா?

By Shankar

மங்காத்தா படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்த மாதிரிதான். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், இப்போது அஜீத் ரசிகர்கள் மத்தியில் அடுத்த பரபரப்பு ஆரம்பமாகியுள்ளது.

இது பில்லா 2 படம் குறித்து...

சக்ரி டோலட்டி இயக்கும் இந்தப் படத்துக்கு இப்போதே இவர்தான் ஹீரோயின் என்று செய்திகள் பரபரக்க ஆரம்பித்துள்ளன. இந்த முறை அனுஷ்காவின் பெயர்தான் அடிபடுகிறது.

பில்லா படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டபோது, அதில் நயன்தாரா வேடத்தில் கலக்கியவர் அனுஷ்கா. படத்தின் வெற்றிக்கு அவரது கவர்ச்சிதான் முக்கியப் பங்காற்றியது. போதாதற்கு நமீதா வேறு முடிந்த வரை குறைந்த உடைகளில் வந்து ரசிகர்களைச் சூடேற்றியிருந்தார்.

இந்த முறை, பில்லா 2 தமிழ்ப் படத்துக்கும் அனுஷ்காவையே ஒப்பந்தம் செய்யத் திட்டமிட்டுள்ளார்களாம். மங்காத்தாவிலேயே அவர் நடிக்க வேண்டியது... ஆனால் கால்ஷீட் பிரச்சினை காரணமாக அவர் நடிப்பது தள்ளிப் போனது. இந்த முறை அஜீத்துடன் நடிக்க ஆர்வமாக இருப்பதாக அனுஷ்காவே பேட்டியொன்றில் கூறியது நினைவிருக்கலாம்...

ஒருவேளை 'குனிந்துகொண்டே டான்ஸ் ஆட வேண்டிய அவசியம் இல்லை' என்ற நிம்மதியில் இப்படிச் சொல்லியிருப்பாரோ!!

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X