ரூ. 40 கோடிக்கு வீடு வாங்கிய ஐஸ்!

எமிரேட்ஸின் எழில் மிகு துபாயில் உலகின் பெரும் பணக்காரர்கள் பலருக்கும் சொந்தமாக வீடுகள் உண்டு. இந்தியாவைச் சேர்ந்த சில பெரும் பணக்காரர்களுக்கு துபாயில் வீடு உண்டு. இந்த வரிசையில் தற்போது ஐஸ்வர்யாவும், அபிஷேக்கும் இணைந்துள்ளனர்.
சமீபத்தில் துபாயில் புதிய பிளாட் ஒன்றை இருவரும் வாங்கியுள்ளனராம். இதன் விலை ரூ.40 கோடி என்கிறார்கள். சகல வசதிகளும் நிரம்பிய ஆடம்பர மாளிகையாம் இது.
தற்போதுதான் இது கட்டுமானத்தில் உள்ளது. 2010ம் ஆண்டில்தான் ஐஸ் -அபி கைக்கு வீடு வருமாம். இந்த வீடு எங்கே உள்ளது உள்ளிட்ட விவரங்கள் தெரியவில்லை.
துபாயில் வீடு வாங்கியிருப்பதை ஐஸ்வர்யா உறுதிப்படுத்தியுள்ளார். துபாய் மிகவும் அழகான நகரம். அங்கு வீடு வாங்கியிருப்பது பெருமையாக உள்ளது என்றார் ஐஸ்வர்யா.
ஐஸ்வர்யா எங்கிருந்தாலும் அது அழகாகி விடும். துபாய் இன்னும் அழகாகி விடும்.


Click it and Unblock the Notifications











