அமிதாப்புக்கு கிடைத்த அட்டன் 'ஹக்'

By Staff

Amithab Bachan
பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடித்த தி லாஸ்ட் இயர் படத்தைப் பார்த்த ஹாலிவுட் இயக்குநர் ரிச்சர்ட் அட்டன்பரோ, அமிதாப்பைக் கட்டிப் பிடித்து பாராட்டினார்.

அமிதாப்பச்சனுக்கு விருதுகளும், பாராட்டுக்களும் புதிதல்ல. தேசிய அளவில் சிறந்த நடிகர் விருது முதல் பல விருதுகளை பெற்று பாக்கெட்டில் போட்டுக் கொண்டுள்ளவர் அமிதாப். ஆனால் சமீபத்தில் அவருக்கு வித்தியாசமான ஒரு பாராட்டு - அவர் எதிர்பாராதது - கிடைத்தது. நமது நாட்டில் அல்ல - லண்டனில்.

அமிதாப்பச்சன் நடித்துள்ள ஆங்கிலப் படம் தி லாஸ்ட் இயர். இப்படம் லண்டன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. இதில் அமிதாப்பச்சனும் கலந்து கொண்டார்.

படம் பார்த்து முடித்ததும், அனைவரும் எழுந்து நின்று கரவொலி எழுப்பினர். இதை தலை குணிந்து ஏற்றுக் கொண்டார் அமிதாப் பச்சன். அப்போது அவரிடம் வந்த நிழ்ச்சி ஏற்பாட்டாளர்களில் ஒருவர், மேடைக்குப் பின்புறம் ஒரு முக்கியப் புள்ளி உங்ளை சந்திக்க காத்திருப்பதாக தெரிவித்தார்.

யார் அந்த புள்ளி என்ற குழப்பத்துடன் போனார் அமிதாப். அங்கே நின்றிருந்தவரைப் பார்த்ததும் அவருக்கு ஆச்சரியமாகி விட்டது. காரணம் காந்தி படத்தை இயக்கி இந்தியர்களிடமும் பிரபலான ரிச்சர்ட் அட்டன்பரோதான் அங்கு நின்று கொண்டிருந்தவர்.

அமிதாப்பை பார்த்த அட்டன்பரோ அவரை நெருங்கி அணைத்துக் கொண்டார். இதை அமிதாப் எதிர்பார்க்கவில்லை. மிகச் சிறப்பாக நடித்திருக்கிறீர்கள், வாழ்த்துக்கள் என்று அட்டன்பரோ சொல்லிக் கொண்டே போக அமிதாப்புக்கு கனவா, நிஜமா என்ற சந்தோஷக் குழப்பம்.

அட்டன்பரோவின் அணைப்பையும், பாராட்டையும் சந்தோஷத்துடனும், கெளரவத்துடனும் ஏற்றுக் கொண்டார் அமிதாப்பச்சன்.

ஏற்கனவே சர்க்கார் ராஜ் மற்றும் தி லாஸ்ட் இயர் படங்களில் அமிதாப்பின் நடிப்பைக் கேள்விப்பட்டு அவர் மீது பொறாமையாக உள்ளதாக ஹாலிவுட் சூப்பர் ஸ்டார்களில் ஒருவரான ராபர்ட் டி நீரோ கூறியிருந்தது நினைவிருக்கலாம்.

சர்க்கார் ராஜ் படத்தின் டிவிடியை தனக்கு அனுப்பி வைக்குமாறு அவர் இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு கோரிக்கையும் விடுத்துள்ளார். மேலும் அமிதாப்புடனும் நடிக்க ஆசையாக இருப்பதாகவும் டி நீரோ விருப்பம் வெளியிட்டுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X