'ஹாட்'டா வருவேன்!

பாபு கணேஷ் ஹீரோவாக நடித்து, இயக்கி உருவாக்கி வரும் படம் நானே வருவேன். படத்தில் ஒன்றுக்கு ஐந்து ஹீரோயின்கள். படம் முழுக்க கவர்ச்சியை வாரி இறைத்துள்ளனராம் இந்த ஐந்து பேரும். கவர்ச்சி மட்டுமல்லாமல், திகிலும் படம் முழுக்க இழையோடியுள்ளது.
இது ஒரு திகில் படம். இதற்காக ஏகப்பட்ட கிராபிக்ஸ் வேலைகளை செய்து வருகிறாராம் பாபு கணேஷ். திகில் படம் என்பதால் ரசிகர்கள் பயந்து மட்டும் போகக் கூடாது என்பதற்காக கவர்ச்சிக்காக ஷில்பா, வகீதா, விக்டோரியா, ஸ்டெபி, சானியா ஆகிய ஐந்து நாயகிகளைப் போட்டுள்ளார் பாபு கணேஷ்.
படத்தின் நாயகிகளில் வகீதா ஆந்திராவையும், ஷில்பா கர்நாடகத்தையும், ஸ்டெபி கேரளாவையும், விக்டோரியா கனடாவையும் சேர்ந்தவர்கள். சானியா மும்பையைச் சேர்ந்தவராம்.
படத்தின் கதை என்னவென்றால், படத்தின் நாயகியான யூரோ வில்லன்களால் கடத்தப்பட்டு போதைப் பொருள் கொடுக்கப்பட்டு நிர்வாணப்படுத்தப்பட்டு கற்பழிக்கப்படுகிறார். சுய நினைவுக்கு வரும்போது தான் நிர்வாணமாக இருப்பதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்து தற்கொலை செய்து கொள்கிறாராம். அதன் பின்னர் வில்லன்களை ஹீரோ வேட்டையாடுகிறார்.
இப்படத்தில் நாயகி வகீதா நிர்வாணமாக காட்சியளிக்கும் வகையில் நடித்துள்ளாராம்.
சென்னை, ஹைதராபாத், இலங்கை என பல பகுதிகளில் ஷூட்டிங்கை முடித்துள்ளார் பாபு கணேஷ்.
கவர்ச்சியும், திகிலும் கை கோர்த்து உலவும் இப்படத்தை பிரமாண்டமான கிராபிக்ஸ் வேலைகளுடன் விரைவில் திரைக்குக் கொண்டு வரவுள்ளாராம் பாபு கணேஷ்.
சமீபத்தில் இதன் புரோமோக்களை வெளியிட்டார் பாபுகணேஷ். அதைப் பார்த்து தேஜாஸ்ரீ, மனோரமா, கோவை சரளா உள்ளிட்டோர் பாராட்டினார்களாம்.


Click it and Unblock the Notifications











