பிக் பாஸ் ரியாலிட்டி ஷோ வீட்டில் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்ட பாக். நடிகை

By Chakra

Veena Malik
கலர்ஸ் டிவி சார்பில் நடத்தப்பட்டு வரும் பிக் பாஸ் என்ற ரியாலிட்டி ஷோவின்போது, பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கும், இன்னொரு ஆண் போட்டியாளரும் செக்ஸ் விளையாட்டில் ஈடுபட்டது ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளது.

பிக் பாஸ் என்ற பெயரில் ஒரு ரியாலிட்டி ஷோவை நடத்தி வருகிறது கலர்ஸ் டிவி. இந்த நிகழ்ச்சியை காம்பியரிங் செய்து வருகிறார் நடிகர் சல்மான் கான். பாகிஸ்தான் நடிகை வீனா மாலிக்கும் போட்டியாளர்களில் ஒருவர். போட்டியாளர்கள் அனைவரும் இதற்காக ஒரு வீட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் படு அதிர்ச்சிகரமான ஒரு சம்பவம் பிக் பாஸ் வீட்டில் நடந்துள்ளதாம். அதாவது நடிகை வீனா மாலிக்கும், இன்னொரு ஆண் போட்டியாளரும் படு மும்முரமாக செக்ஸ் நடவடிக்கைகளில் ஈடுபட்டது ரகசியக் கேமராவில் பதிவாகியுள்ளதாம்.

அந்த வீடியோவில் வீனா மாலிக்கும், ஆண் போட்டியாளரும் அரை குறை ஆடையுடன் காணப்பட்டனராம். வீணா மாலிக்கும், அவரும் ஏகப்பட்ட முத்தங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர். அத்தோடு நில்லாமல் இருவரும் படு நெருக்கமாக படுத்தபடி கையை அங்குமிங்கும் அலைய விட்டுள்ளன். இதற்கு மேலும் அவர்கள் போயுள்ளனர். அவை, எழுத்தில் கூற முடியாத அளவுக்கு மிகவும் அந்தரங்கமானவை.

தங்களைக் கண்காணிக்க கேமராக்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளதை அறியாமல் இருவரும் இந்த லீலையில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் திடீரென அந்த ஆண் போட்டியாளர் கேமரா வைக்கப்பட்டிருப்பதை உணர்ந்து சட்டென எழுந்து விடுகிறார். கிட்டத்தட்ட 2 நிமிடம் இந்த காட்சிகள் ஓடுகின்றவாம்.

இந்தக் காட்சிகள் அடங்கிய வீடியோவை கலர்ஸ் டிவி நேயர்களுக்குக் காட்டுமா என்பது தெரியவில்லை. ஒரு வேளை எடிட் செய்து காட்டக் கூடும் என்று தெரிகிறது. காரணம், அந்தக் காட்சியை அப்படியே காட்ட முடியாத அளவுக்கு படு அந்தரங்கமாக உள்ளது.

வீனா மாலிக்கும், ஆண் போட்டியாளரும் சம்பந்தப்பட்டுள்ள இந்த காட்சிகள் என்ன மாதிரியான சர்ச்சையைக் கொண்டு வரப் போகின்றன் என்று தெரியவில்லை. ஆனால் இவை வெளியானால் சிவசேனாவும், மகாராஷ்டிர நவ நிர்மான் சேனாவும் கச்சைக் கட்டிக் கொண்டு கிளம்பும் என்பது உறுதி.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X