தெலுங்கில் 'ரக்சகடு' ஆக டப் ஆகும் தாம் தூம்!
தமிழில் வெளியான திரில்லர் படமான 'தாம் தூம்', தெலுங்கில் 'ரக்சகடு' என்ற பெயரில் டப் ஆகிறது.
ஜெயம் ரவி, கங்கணா ரனவத் நடிப்பில் ஜீவா இயக்கத்தில் உருவான படம் தாம் தூம். இப்படத்தில் லட்சிமி ராயும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். இப்படம் ரஷ்யாவில் படமாக்கப்பட்ட சமயத்தில்தான் ஜீவா மரணமடைந்தார்.
தற்போது இப்படம் தெலுங்கில் ரக்சகடு என்ற பெயரில் டப் ஆகிறது. ரஷ்யாவுக்கு ஒரு மாநாட்டில் பங்கேற்க செல்கிறார் டாக்டர் ஜெயம் ரவி. சொந்த ஊரில் தனது காதலி கங்கணாவை விட்டு விட்டு அவரது நினைவுகளுடன் செல்லும் ரவிக்கு ரஷ்யாவில் பெரும் சிக்கல் காத்திருக்கிறது.
மாநாட்டுக்காக சென்ற இடத்தில் அன்னா என்ற ரஷ்யப் பெண்ணை சந்திக்கிறார். அவர் மர்மமான முறையில் கொல்லப்பட, அந்தப் பழி ரவி மீது விழுகிறது. அவரைக் காப்பாற்ற முயல்கிறார் வக்கீலான லட்சுமி ராய். படத்தில் ஜெயராமும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
தமிழில் வெளியான இப்படத்தை தற்போது தெலுங்கு ரசிகர்களுக்காக டப் செய்து வெளியிடுகிறார்கள்.


Click it and Unblock the Notifications











