ஸ்டன்ட் மாஸ்டர் மகளை திருமணம் செய்தார் பிரபல இயக்குநர் மித்ரன் ஜவகர்.
யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களை இயக்கியவர் மித்ரன் ஆர் ஜவகர். திருச்சியை சேர்ந்த மித்ரன் ஜவகர் தற்போது சென்னை நெசப்பாக்கத்தில் வசித்து வருகிறார்.
சினிமா சன்டை காட்சிகளை வடிவமைக்கும் புல்லட்பாபு என்பவருடைய மகள் ஜபின் பானுவை ஜவகர், ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இரு குடும்பத்தின் சம்மதத்துடன் டிசம்பர் 5-ந் தேதி ஜவகர்-ஜபின் இருவருக்கும் நிச்சயம் செய்து முடிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இம்மாதம் 2-ந் தேதி எழும்பூரில் உள்ள சிராஜ் மஹாலில் இருவருக்கு திருமணம் நடந்துள்ளது.
திருமண விழாவில் இயக்குனர் ஷங்கர், நடிகர் பிரசன்னா, விவேக், இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்தினர். இரண்டு நாட்களுக்கு முன், வடபழனியில் உள்ள ஒரு ஐந்து நட்சத்திர விடுதியில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
ஆனால் இந்தத் திருமணம் குறித்து வெளியில் செய்தி வராமல் பார்த்துக் கொண்டசார் ஜவகர் என்பது குறிப்பிடத்தக்கது.
மிக குறுகிய காலத்தில் திருமணம் நிச்சயத்து நடைபெற்றதால் யாரையும் அழைக்க முடியவில்லை என்றார் ஜவகர்.


Click it and Unblock the Notifications











