லிசா ரேவுக்கு புற்று நோய்

இந்தியத் தந்தைககும் போலந்தைச் சேர்ந்த தாய்க்கும் பிறந்தவரான லிசா ரே, முன்னணி மாடல் ஆவார். பாம்பே டையி்ங் விளம்பரம் மூலம் பிரபலமான இவர் பல படங்களிலும் நடித்துள்ளார்.
ஆஸ்கர் விருதுக்கு போட்டியிட்ட தீபா மேத்தாவின் வாட்டர் படத்தில் கல்யாணி என்ற விதவைப் பாத்திரத்தில் நடித்து கண் கலங்க வைத்தவர்.
37 வயதான லிசா ரே சில காலமாகவே மாடலிங்கில் இருந்து ஒதுங்கிவிட்டார். இந் நிலையில் தனது பிளாக்கில் அவர் எழுதியிருப்பதாவது:
எனக்கு மைலோமா என்ற வகை எலும்பு கேன்சர் இருப்பது கடந்த ஜூன் மாதத்தில் தெரியவந்தது. ஜூலையில் இருந்து சிகிச்சை எடுத்து வருகிறேன். இந்த நோய்க்கு மருந்து இல்லை என்கிறார்கள். ஆனாலும் நான் நம்பிக்கை இழக்கவில்லை. நோயை வெல்ல முடியும் என்ற நம்பிக்கையோடு அதனுடன் என் போராட்டத்தை ஆரம்பித்துள்ளேன். போராட்டம் தானே வாழ்க்கை..! என்று எழுதியுள்ளார் ரே.
ரேவுக்கு புற்று நோய் இருப்பது மாடலிங் உலகில் பலரையும் அதி்ர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
எலும்பு மஞ்சைகளில் உள்ள செல்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுவது தான் மைலோமா ஆகும்.


Click it and Unblock the Notifications











