ஸ்பானிஷ் பேசும் கந்தசாமி!

கலைப்புலி தாணு பிரமாண்டமான முறையில் தயாரித்துள்ள படம் கந்தசாமி. விக்ரம், ஷ்ரேயா இணைந்து நடிக்க, சுசி. கணேசன் இயக்கியுள்ளார்.
இப்படத்தை இப்போது சர்வதேச படமாக்கப் போகிறார் தாணு. தமிழ் தவிர ஆங்கிலம், ஸ்பானிஷ், இத்தாலியன் ஆகிய மொழிகளிலும் படத்தை டப் செய்யவுள்ளார் தாணு.
மேலும், 3 பாடல்களையும் இத்தாலியனுக்கு மொழி பெயர்க்கிறார்களாம். இதுதொடர்பாக இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், இத்தாலிய இசைக் குழுவுடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
இதில் விசேஷம் என்னவென்றால் தமிழ் தவிர மற்ற நான்கு மொழிகளிலும் விக்ரமே டப்பிங் கொடுக்கவுள்ளார் என்பதுதான். அந்த வகையில் பல பாஷையில் டப்பிங் பேசிய முதல் இந்திய நடிகர் என்ற பெருமையும் கூட விக்ரமுக்குக் கிடைக்கவுள்ளது.
மெக்சிகோவில் படப்பிடிப்பு நடந்தபோது, விக்ரம் கிட்டத்தட்ட ஸ்பெயின்காரர் போலவே மாறியிருந்தாராம். படத்தில் ஸ்பானிஷ் தவிர இத்தாலியன் லுக்கும் இருப்பதால்தான் படத்தை இந்த இரு மொழிகளிலும் டப் செய்ய கலைப்புலி தாணு முடிவு செய்தாராம்.
விக்ரமும், ஷ்ரேயாவும் இத்தாலிய, ஸ்பானிஷ் உடைகளிலும் படத்தில் பல காட்சிகள், பாடல்களில் தோன்றுகிறார்கள். மேலும் ஸ்பெயின் நாட்டின் பிரபலமான காளை அடக்கும் நிகழ்ச்சியும் இதில் இடம் பெறுகிறதாம்.


Click it and Unblock the Notifications











