மீரா ஜாஸ்மின், மோகன்லாலுக்கு கேரள அரசு விருது

கடந்த ஆண்டுக்கான விருதுக்குரியவர்களை தேர்ந்தெடுக்க அஸ்ஸாமி மொழிப்பட இயக்குனர் ஜானு பருவா தலைமையில் 8 பேரைக் கொண்ட குழு அமைக்கப்பட்டது. இக்குழு 28 படங்களை பார்வையிட்டு, தேர்வு செய்தது.
விருதுப் பட்டியலை கேரள கலாசார விவகாரத்துறை மந்திரி எம்.ஏ.பேபி வெளியிட்டார்.
பரதேசி படத்தில் நடித்ததற்காக மோகன்லால் சிறந்த நடிகர் விருது பெறுகிறார். ஒரே கடல் படத்தில் நடித்ததற்காக மீரா ஜாஸ்மின் சிறந்த நடிகை விருது பெறுகிறார்.
அடையாளங்கள் என்ற படம் சிறந்த படமாகவும், அப்படத்தை இயக்கிய எம்.ஜி.சசி சிறந்த டைரக்டராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
மக்கள் மனம் கவர்ந்த படமாக கதா பறயும்போல்' தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இப்படம்தான் ரஜினி நடிக்க குசேலன் என்ற பெயரில் தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் ஆகிறது.
சிறந்த பின்னணிப் பாடகராக விஜய் ஜேசுதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நைவேத்யம் படத்துக்காக, எம்.ஜெயச்சந்திரன், சிறந்த இசையமைப்பாளராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
விருது பெற்ற பிறர்:
2வது சிறந்த நடிகர் - முரளி
2வது சிறந்த நடிகை - லட்சுமி கோபாலசாமி
சிறந்த பாடகி - ஷ்வேதா மோகன்


Click it and Unblock the Notifications











