யுகபாரதிக்கு கல்யாணம்

திரைப்படப் பாடலாசிரியர் யுகபாரதிக்கு தஞ்சையில் வருகிற 23ம் தேதி கல்யாணம் நடைபெறுகிறது. தஞ்சையைச் சேர்ந்த அன்புச் செல்வியை அவர் மணக்கிறார். திருமணத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு நடத்தி வைக்கிறார்.
ஆனந்தம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகுக்கு அறிமுகமானவர் யுகபாரதி. அப்படத்தில் இடம் பெற்ற பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம் என்ற பாடல் யுகபாரதிக்கு பெரும் புகழைத் தேடி தந்தது.
தொடர்ந்து ஏராளமான படங்களில் அவர் பல பிரபல பாடல்களை எழுதினார். திருடா திருடியில் இடம் பெற்ற மன்மதராசா, சந்திரமுகியில் இடம் பெற்ற கொஞ்ச நேரம் கொஞ்ச வேண்டும் உள்ளிட்ட பாடல்கள் யுகபாரதியின் ஹிட் பாடல்களில் சில.
யுகபாரதிக்கும், தஞ்சையைச் சேர்ந்த மணவாளன் - லட்சுமி தம்பதிகளின் மகள் அன்புச் செல்விக்கும் திருமணம் நிச்சயமாகியுள்ளது.
23ம் தேதி காலை 10.30 மணிக்கு தஞ்சையி்ல் உள்ள குரு தயாள் சர்மா மண்டபத்தில் திருமணம் நடைபெறுகிறது. திருமணத்தை மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கி நடத்தி வைக்கிறார்.


Click it and Unblock the Notifications











