முடிக்காக இழந்த வாய்ப்புகள்!-மந்திரா பேடி

சென்னையில் ஒரு பர்ப்யூம் மற்றும் பெண்கள் ஆடையகத்தைத் திறந்து வைக்க வந்திருந்த மந்திரா, பின்னர் நிருர்களிடம் கூறியதாவது:
சின்ன வயதிலிருந்தே எனக்கு பர்ஃப்யூம்ஸ் மற்றும் ஆண்கள் அணியும் உடைகள்தான் பிடிக்கும்.
இந்த புதிய ஹேர்ஸ்டைல் பற்றி நிறையப் பேர் குறையாகக் கேட்கிறார்கள். இந்த முறை டிஎல்எப் போட்டிக்காக நான் செய்துகொண்ட புதிய ஹோர்ஸ்டைல் இது. செட்மேக்ஸ் ஒப்பந்தத்தில் இதுவும் ஒன்று.
இந்த குட்டை முடி காரணமாக நான் சில பட வாய்ப்புகளையும் இழந்துவிட்டேன். அதுதான் கஷ்டமாக உள்ளது.
நிச்சயம் என்னுடைய அடுத்த கிரிக்கெட் வர்ணனையின்போது நீண்ட கூந்தலோடு என்னைப் பார்ப்பீர்கள்," என்றவரை... 'அட அதுக்குள்ள அவ்வளவு நீளத்துக்கு முடி வளர்ந்து விடுமா உங்களுக்கு மட்டும்?' என்று நிருபர்கள் மடக்க...
'அரே யார்... விக் இருக்க எனக்கென்ன கவலை!' என ஒரு லுக் விட்டார்...
க்ளீன் போல்டு!


Click it and Unblock the Notifications











