மீ்ண்டும் சிவப்பு ரோஜாக்கள்!

பாக்யராஜ் கதையில், கமல் - ஸ்ரீதேவி நடிப்பில், இளையராஜா இசையில் உருவாகி, வெளியான அத்தனை மொழிகளிலும் சரித்திரம் படைத்த படம் சிவப்பு ரோஜாக்கள்.
இந்தப் படத்தின் பின்னணி இசையைக் கேட்ட பாலிவுட் இசை மேதை ஆர்டி பர்மன், நிச்சயம் இதைவிட பெட்டராக என்னால் பண்ண முடியாது என்று வெளிப்படையாகக் கூறினார்.
சைக்கோ பாத்திரத்தை எப்படி செய்ய வேண்டும் என இந்தப் படத்தில் கமல்ஹாஸனைப் பார்த்து கற்றுக் கொள்ள வேண்டும் இன்றைய நடிகர்கள்.
இந்தப் படத்தைத்தான் மறுபடியும் ரீமேக்குகிறார்கள்.
இந்த வேலையில் இறங்கியிருப்பவர் வேறு யாருமல்ல... பாரதிராஜாவின் மகன் மனோஜ். தயாரிக்கப் போகிறவர், ஒரிஜினல் படத்தை எடுத்த அதே கேஆர்ஜிதான்!
இசையமைப்பாளர், இசைஞானியின் இளைய வாரிசு யுவன் ஷங்கர் ராஜா.
நடிகர் நடிகைகள் தேர்வில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் மனோஜ். அனேகமாக தனுஷ் நடிப்பார் என்று கூறப்படுகிறது. சிம்பு, ஆர்யா பெயர்களும் பரிசீலனையில் உள்ளனவாம்.
"நிச்சயம் ஒரிஜினல் படத்தின் புகழைக் காப்பாற்றும் வகையில் அவர்களின் வாரிசுகளான எங்களின் இந்த புதிய முயற்சி அமையும். திறமை வாய்ந்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளனர். ஹாலிவுட் திரில்லர் பாணியில் காட்சிகள் படமாக்கப்படும்.." என்கிறார் இந்தப் படம் குறித்து பாரதிராஜாவின் மகன் மனோஜ்.


Click it and Unblock the Notifications











