ஜனவரியில் கமல்ஹாசனின் மர்மயோகி தொடக்கம்?

By Staff

Kamal Hassan
கமல்ஹாசன் நடிப்பதாக அறிவித்து, தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்ட பிரமாண்ட திட்டமான 'மர்மயோகி' மீண்டும் துவங்கப்படும் என்று தெரிகிறது.

வரும் ஜனவரி 13-ம் தேதி இந்தப் படத்தின் பூஜை நடைபெறக்கூடும் என கூறப்படுகிறது.

நவம்பர் மாதம் இந்தப் படம் ஆரம்பிக்கப்படும் என படத்தின் தயாரிப்பாளர் பிரமிட் சாமிநாதன் மற்றும் கமல்ஹாசன் கூட்டாக அறிவித்திருந்தனர். ஆனால் நிதி நெருக்கடி காரணமாக இந்தப் படம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கமல்ஹாசனும் இதனை உறுதிப்படுத்தியிருந்தார்.

இந்தப் படத்துக்குப் பதில் தலைவன் இருக்கின்றான் படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என கமலின் மக்கள் தொடர்பாளர் நிகில் கூறியிருந்தார். இந்தப் படத்தில் கமலுக்கு ஜோடியாக த்ரிஷா மற்றும் தபு நடிப்பதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன.

இதற்கிடையே வரும் ஜனவரி 13-ம் தேதி மர்மயோகி படப்பிடிப்பும் ஆரம்பமாகும் என்று கூறப்படுகிறது. ஆனால் கமல் அல்லது அவரது அலுவலக வட்டாரங்கல் இதுகுறித்து எந்தத் தகவலும் கூறவில்லை. ஆனால் பிரமிட் சாமிநாதன் மட்டும், படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்படும் எனக் கூறியுள்ளார்.

எனவே ஒரே நேரத்தில் மர்மயோகி மற்றும் தலைவன் இருக்கின்றான் ஆகிய இரண்டு குதிரைகளில் 'டபுள் சவாரி' செய்யப் போகிறாரா கமல்?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X