twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஈழத் தமிழர்களுக்கு வி்ன்பிரே உதவ வேண்டும்-பாடகி எம்.ஐ.ஏ

    By Staff
    |

    Mathangi Arulprakasam
    நியூயார்க்: இலங்கையில் தமிழர்கள் சந்தித்து வரும் கொடூரமான இனப்படுகொலை, இலங்கை அரசு நடத்தி வரும் அப்பட்டமான மனித உரிமை மீறல், தமிழர்களின் துயரங்களை உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்ட உதவ வேண்டும் என உலக டாக் ஷோக்களின் முன்னோடியான ஓப்ரா வின்பிரேக்கு இங்கிலாந்தில் பிறந்த, இலங்கைத் தமிழ்ப் பெண்ணான பிரபல பாடகி எம்.ஐ.ஏ. (மாதங்கி அருள் பிரகாசம்) கோரிக்கை விடுத்துள்ளார்.

    இங்கிலாந்தைச் சேர்ந்த மாதங்கி பிரபல பாடகியாவார். ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இவர் பாடியுள்ளார். இந்தப் பாடல் பேப்பர் பிளேன்ஸ் என்ற மாதங்கியின் இசைத் தொகுப்பில் இடம் பெற்றதாகும். இப்பாடலே, ஸ்லம்டாக் மில்லியனர் படத்திலும் இடம் பெற்றது.

    இதேபோல பைனாப்பிள் எக்ஸ்பிரஸ் என்ற தொகுப்பையும் வெளியிட்டுள்ளார் மாதங்கி. பேப்பர் பிளேன்ஸ், கிராமி விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

    மாதங்கியின் தந்தை விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்தவர். இதன் காரணமாக விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான கருத்தைக் கொண்டவர் மாதங்கி. தனது பாடல்களிலும் கூட விடுதலை வேட்கையை வெளிப்படுத்தும் வகையிலான வார்த்தைகளை இடம் பெறச் செய்வார்.

    இவரது பாடல்களில் அடிமைத்தளையிலிருந்து மீள்வது குறித்த வார்த்தைகள் கண்டிப்பாக இடம் பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்த நிலையில் இலங்கையில் அப்பாவித் தமிழர்கள் மீதான அடக்குமுறைகள், இனப்படுகொலைகள், பெண்களின் அவல நிலை குறித்து உலகத்திற்கு எடுத்துக் காட்டி அவர்களுக்கு உதவுமாறு ஓப்ரா வின்பிரேவுக்கு கோரிக்கை விடுத்துள்ளார் மாதங்கி.

    சமீபத்தில் டைம் இதழின் 100 சக்திவாய்ந்த மனிதர்களுக்கான விருது விழாவின்போது வின்பிரேவை சந்தித்து ஈழத்து இனப்படுகொலை குறித்து விவரித்தார் மாதங்கி.

    அதுகுறித்து மைஸ்பேஸ்.காம் இணையப் பக்கத்தில் மாதங்கி எழுதியுள்ளதாவது..

    நான் அவரிடம் ஈழத்து நிலைமையைக் கூறியபோது எனது இரு கைகளையும் வின்பிரே அழுத்தமாக பிடித்துக் கொண்டார். நான் சொன்னது குறித்து அவர் அக்கறை காட்டுகிறார் என்பதை நான் புரிந்து கொண்டேன்.

    அந்த நிகழ்ச்சியில் மிஷல் ஒபாமாவும் பேசினார். எனக்கு அவரிடம் நெருங்க வாய்ப்பு கிடைக்கவில்லை. கிடைத்திருந்தால் அவரிடமும் கூறியிருப்பேன். இல்லாவிட்டால் ஒரு காகிதத்தை அம்பாக அவருக்கு விட்டு, ஈழத் தமிழர்கள் கொல்லப்படுவதை தடுத்து நிறுத்துங்கள் என்றாவது கோரியிருப்பேன்.

    நிச்சயம் ஓப்ரா வின்பிரே இந்த விஷயத்தில் உதவ முடியும். அப்பாவி மக்களுக்காக உதவுங்கள் ஓப்ரா என்று உருக்கமாக கூறியுள்ளார் மாதங்கி.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X