இன்னொரு அனுஷ்கா!

By Staff

Anushka
பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கானின் 'ரப் நே பனா தி ஜோடி' படத்தில் பெங்களூரைச் சேர்ந்த அனுஷ்கா சர்மா என்கிற மாடல் அழகி ஜோடியாக நடிக்கவுள்ளார்.

ஷாருக் கானுக்கு இப்போது மாடல்களுடன் ஜோடி சேரும் காலம் போல. அவரது சூப்பர் டூப்பர் ஹிட்டான ஓம் சாந்தி ஓம் படத்தில் பெங்களூரைச் சேர்ந்த பிரபல மாடல் அழகியான தீபிகா படுகோன் ஜோடியாக நடித்தார். ஒரே படத்தில் பாலிவுட்டின் ஹாட்டஸ்ட் நாயகி ஆனார். அவரது வளர்ச்சியைப் பார்த்து ஐஸ்வர்யா ராயே சற்று அரண்டுதான் போயிருக்கிறார்.

இந்த நிலையில் ஷாருக்கானின் அடுத்த படமான 'ரப் நே பனா தி ஜோடி' படத்திலும் ஒரு மாடல் அழகிதான் ஜோடியாக நடிக்கவுள்ளார். அவரது பெயர் அனுஷ்கா சர்மா. தீபிகாவைப் போலவே இவரும் பெங்களூர்வாசிதான் என்பது ஒரு இனிய பொருத்தம்.

யாஷ்ராஜ் பிலிம்ஸ் தயாரிக்கும் 'ரப் நே பனா தி ஜோடி' படத்தில் அனுஷ்கா நடிக்கவிருக்கும் தகவலை யாஷ்ராஜ் பிலிம்ஸ் தலைவரான யாஷ் சோப்ரா முறைப்படி அறிவித்துள்ளார். ஜிகர்தண்டா போல ஜில்லென இருக்கும் அனுஷ்காவுக்கு வயது 19 தானாம்.

இப்படத்தை ஆதித்யா சோப்ரா இயக்குகிறார். கிட்டத்தட்ட 8 வருடங்களுக்குப் பிறகு அவர் டைரக்ஷனுக்குத் திரும்புகிறார். .

அனுஷ்காவுக்கு மாடல் அழகியாக மட்டுமே அனுபவம் உள்ளது. அவருக்கு நடிப்பு அனுபவம் சுத்தமாக இல்லை. இனிமேல்தான் கற்றுக் கொள்ள வேண்டுமாம்.

முன்னதாக நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர், ஷாருக் ஜோடியாக நடிக்கக் கூடும் என பேச்சு இருந்தது. ஆனால் இப்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டார் அனுஷ்கா.

அனுஷ்காவுக்கு நடிப்பனுபவம் இல்லாவிட்டாலும் கூட படத்தில் அவரது கேரக்டருக்கு மிக பொருத்தமாக இருப்பார் என்பதால்தான் அனுஷ்காவை தேர்வு செய்ததாக யாஷ் சோப்ரா கூறியுள்ளார்.

'ரப் நே பனா தி ஜோடி' படத்தின் ஷூட்டிங் மே 16ம் தேதி ஆரம்பிக்கிறதாம். டிசம்பர் 12ம் தேதி உலகெங்கும் திரைக்கு வருகிறது.

தீபிகாவை ஓரம் கட்டுவாரா அனுஷ்கா?

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X