'ஜூ ஜூ ஜூ ஜூ நாயுமே'!

ஆதி கால சினிமாக்களில் ஹீரோக்களும், ஹீரோயின்களும் தங்களுக்கான பாடல்களை தாங்களே பாடிக் கொள்வார்கள். பிற்பாடு, பின்னணிப் பாடகர்கள் அறிமுகமானார்கள்.
இக்காலத்தில், ஹீரோக்களும், ஹீரோயின்களும் பாடுவது பேஷனாகி வருகிறது. விஜய் முன்பு பாடினார். கமலும் கூட பாடுகிறார். ஷாலினி ஒரு படத்தில் பாடினார். ரஜினியைக் கூட மன்னன் படத்தில் பாட வைத்தார் இளையராஜா.
சமீபத்தில் வந்த சண்டை படத்தில் சுந்தர்.சியும் வாடி என் கப்பக்கிழங்கே ரீமிக்ஸ் பாடலுக்கு குரல் கொடுத்து கலக்கினார். இந்த வரிசையில் இணைந்துள்ளார் சிரிப்பு நடிகர் எம்.எஸ்.பாஸ்கர்.
டிவி நடிகராக அறிமுகமான பாஸ்கர் இப்போது சினிமா நடிகர். சாது மிரண்டா படம் அவருக்கு பிரேக் கொடுத்துள்ளது. இந்த நிலையில் பாடகராகவும் கலக்க ஆரம்பித்துள்ளார் பாஸ்கர்.
புதுமுகங்கள் ஆதித்யா, கவிநயா ஜோடியின் நடிப்பில் உருவாகும் இன்னொருவன் படத்தில்தான் பாஸ்கர் பாட்டு இடம் பெறுகிறது.
ஆதிஷ் உத்ரியன் இசையமைப்பில் உருவாகியுள்ள இப்பாட்டு பக்கா மெட்ராஸ் தமிழில் எழுதப்பட்டுள்ளது.
'ஜூஜூஜூஜூ நாயுமே, அந்த நாயுக்குத்தான் நன்றி ரொம்ப கீதுமே' என்று பாட்டு ஆரம்பிக்கிறது.
படத்தின் தயாரிப்பாளரான குடந்தை சந்திரசேகரே இப்பாட்டை எழுதியுள்ளார். ஏவிஎம் ஆர்ஆர் ரெக்கார்டிங் ஸ்டுடியோவில் 2 நாட்களுக்கு முன்பு இந்த நாய்ப் பாட்டை பாஸ்கர் பாடினாராம்.
சும்மா சொல்லக் கூடாது, பாஸ்கர் சூப்பாராகவே பாடியுள்ளாராம் பாடலை.
மணிவண்ணன், விசு, காதல் தண்டபாணி உள்ளிட்டோர் நடித்துள்ள இப்படத்தை குணசேகரன் இயக்குகிறார்.
ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கும் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்ைத விளக்கும் படமாம் இது.
சென்னையில் தொடங்கி ஊட்டி, கொடைக்கானல், காஞ்சிபுரம், செஞ்சி என படப்பிடிப்பை முடுக்கி விட்டுள்ளனர். ஒரே ஷெட்யூலில் படத்தை முடிக்கும் திட்டம் உள்ளதாம்.
நைனா பாஸ்கரு, பாட்டு நல்லாகீது மாமே!


Click it and Unblock the Notifications











