twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தீபாவளி ரேஸில் முந்தியது மைனா!

    By Sudha
    |

    தீபாவளிக்கு வந்த படங்களிலேயே மைனாவுக்கு மட்டும்தான் ரசிகர்களிடம் அமோகமான ஆதரவு கிடைத்துள்ளது. படம் நன்றாக இருப்பதாலும், பாடல்கள் ஹிட்டாகி விட்டதாலும் தீபாவளிக்கு வந்த படங்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளது மைனா.

    முன்பெல்லாம் படம் வெளியாகி முதல் ஒரு வாரமாவது காத்திருக்க வேண்டும் அதன் ரிசல்டை தெரிந்து கொள்ள. வாய் வழி தகவல்கள், மீடியா செய்திகள் மற்றும் பாடல்கள் உபயத்தில் சுமாரான படம் கூட லேட் பிக்கப் ஆனதுண்டு.

    ஆனால் இன்று நிலைமையே வேறு. படம் ரிலீஸாகி முதல் காட்சி முடிந்ததுமே படத்தின் வெற்றி தோல்வி உலகுக்கே தெரிந்துவிடுகிறது. எனவே சரக்கில்லாத படங்கள் தியேட்டரில் மூன்றாவது நாளைக் கடப்பதே உன்பாடு என்பாடு என்றாகிவிடுகிறது.

    எனவே படத்தின் கதை, உருவாக்கம், பார்வையாளர்களைத் தக்க வைக்கிற உத்திகள் மிக மிக முக்கியம்.

    இந்த தீபாவளிக்கு மொத்தம் நான்கு படங்கள் வந்தன. மைனா, வ குவார்ட்டர் கட்டிங், வல்லக்கோட்டை, உத்தமபுத்திரன் ஆகியவை. இதில் ரேஸில் முன்னணியில் இருப்பது மைனா மட்டுமே. நல்ல படம், தவிர்க்க முடியாத தமிழ்ப் படம், சிறப்பான படமாக்கம், பிரபு சாலமனின் இயக்கம், இமானின் இசை, நாயகி அமலாவின் அழகான நடிப்பு, நாயகன் விதார்த்தின் சிறப்பான நடிப்பு என பல நல்ல விஷயங்களுடன் கூடிய படமாக இருப்பதால் மைனாவுக்கு பிரமாதமான வரவேற்பு கிடைத்துள்ளது.

    கிராமத்துக் கதையான மைனாவுக்கு தலைநகர் சென்னையில் நல்ல வரவேற்பு. அதேசமயம் பிற பகுதிகளில் கலவையான முடிவுகள் கிடைத்துள்ளனவாம். வேலூர், திருப்பத்தூரில் வெளியான முதல் இரு தினங்கள் சுமாரான கூட்டம் வந்தது. மற்ற பகுதிகளில் பரவலான வரவேற்பு கிடைத்துள்ளதாம். குறிப்பாக இப்படத்தின் கதைக்களமான தென் மாவட்டங்களில் வரவேற்பு பரவாயில்லை என்றுஅங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

    இன்னொரு படமான தனுஷ் நடித்த உத்தமபுத்திரன் படத்துக்கு 'டாக்'கும் இல்லை... கூட்டமும் இல்லை!

    சென்னையில் அபிராமி வளாகத்தில் உள்ள பெரிய அரங்கான 7 ஸ்டார் அபிராமியில் 10 சதவீத டிக்கெட் கூட புக்காகவில்லை. 90 சதவீத டிக்கெட்டுகள் காலியாக உள்ளன. சங்கம் திரையரங்கில் 100 சதவீதம் காலியாக உள்ளது. படம் பார்க்க வேண்டும் என்றால் எந்த பதட்டமும் இல்லாமல் ரிலாக்ஸாக போய் வாங்கிக் கொள்ளலாம்!

    எந்தப் படமாக இருந்தாலும் டிக்கெட் கிடைப்பது கஷ்டம் என்று கூறப்படும் சத்யம் வளாகத்திலேயே, வாங்க ஆளில்லாமல் கவுன்டர்கள் காத்துவாங்குகின்றன. புறநகர் பகுதிகளில் சில அரங்குகளில் இந்தப் படத்துக்கு காலைக் காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாகக் கூறுகின்றனர்!

    வல்லக்கோட்டை என்ற படம் வந்த நாள் முதலே எந்த பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை. எப்போது தூக்கலாம் என்று தியேட்டர்காரர்கள் காத்திருக்கிறார்கள்.

    இவற்றையெல்லாம் விட படுமோசமான தோல்வியைத் தழுவியுள்ளது தயாநிதி அழகிரி வெளியீடாக வந்துள்ள வ குவார்ட்டர் கட்டிங். படம் ஆரம்பிக்கும்போது அரங்கிலிருக்கும் சிலர் கூட, ஆரம்பித்த ஒரு மணி நேரத்துக்குள் காணாமல் போவதை இந்தப் படத்தில்தான் பார்க்க முடிகிறது.

    சென்னை சத்யம், எஸ்கேப் வளாகங்களில் தீபாவளி ரிலீஸ் படங்கள் ஒன்றிற்குக் கூட புல்லாகவில்லை. எந்த நேரத்தில் போனாலும் கையைப் பிடித்து இழுக்காத குறையாக கூப்பிட்டு டிக்கெட் கொடுக்கும் நிலைதான் உள்ளது. ஆனால் எப்போதோ ரிலீஸாகி இன்னும் ஓடிக் கொண்டுள்ள அவதாருக்கு 80 சதவீத கூட்டம் வருகிறது என்றால்...

    குறை பார்வையாளர்களிடம் இல்லை!

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X