நாடோடிகள் பரணி நடிக்கும் விலை!

சாலையோரங்களில் நடக்கும் விபச்சாரம்தான் படத்தின் மையக் கரு. ஆனால் அதை வியாபாரத்துக்காக கீழ்த்தரமாக சித்தரிக்காமல், இந்தப் பிரச்சினைக்கான உண்மையான காரணங்களை அலசுகுறதாம் இந்தப்படம்.
ரித்து என்ற புதுமுகம் நாயகியாக நடிக்கும் விலை படத்தில், அரை டஜனுக்கும் மேற்பட்ட புதுமுகங்கள் அறிமுகமாகிறார்கள்.
படம் குறித்து இயக்குனர் காமராஜ் கூறுகையில்,
வழக்கமாக மரத்தைச் சுற்றிப் பாட்டுப்பாடும் காதல் கதையல்ல இந்தப் படம். வணிக ரீதியான முயற்சிதான்... ஆனால் அர்த்தமுள்ள படைப்பாக இருக்கும் என்றார்.
தனக்கு கிடைத்த இந்த வாய்ப்பு பற்றி பரணி கூறுகையில், நிறைய கதைகள் கேட்டேன். இந்தக் கதை இயல்பான ஒன்றாகவும் சேலஞ்சிங்காகவும் இருந்தது. அதனால் ஒப்புக் கொண்டேன் என்றார்.
Comments


Click it and Unblock the Notifications