இலங்கை தமிழர்களுக்காக ஒன்று சேர்ந்த நடிகர்களின் ரசிகர்கள்!

ரஜினி, கமல், சரத் குமார், அஜித், விஜய், சூர்யா, பரத், சிம்பு ஆகியோரின் ரசிகர் மன்ற பிரமுகர்கள் இந்த உண்ணாவிரதத்தில் பங்கேற்றனர். பொள்ளாச்சி நகர தி.மு.க. பொறுப்பாளர் செல்வராஜ் உள்ளிட்ட பலர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்களை வந்திருந்து வாழ்த்தினர்.
இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தும் தாக்குதல்களை இலங்கை இராணுவம் நிறுத்தவேண்டும், இலங்கையில் போர் நிறுத்தம் செய்ய இந்திய அரசு முயற்சி எடுக்கவேண்டும், இலங்கை ரானுவத்துக்க ராடார்கள் உள்ளிட்ட தளவாடங்களை வழங்கக்கூடாது, இதுவரை வழங்கியவற்றை திரும்பப் பெறவேண்டும், நிவாரண நிதியை இலங்கை அரசிடம் ஒப்படைக்காமல் ஐ.நா. மூலம் செஞ்சிலுவை சங்கத்திடம் ஒப்படைக்க வேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகளை வலியிறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மாலையில் அனைவரும் பழச்சாறு அருந்தி உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் பங்கேற்க விஜய்காந்தின் தேமுதிக மறுத்துவிட்டது. அரசியல் கட்சியாக மாறி விட்டபடியாலும், இது திமுக தூண்டுகலில் நடக்கும் உண்ணாவிரதம் என்று கூறியும் தே.மு.தி.க.வினர் உண்ணாவிரதத்தில் பங்கேற்க மறுத்து விட்டார்களாம்.


Click it and Unblock the Notifications











