பழஸி ராஜா-'அந்தர் பல்டி!

அடுத்த நாளே இது விவகாரமானது. காரணம் பழஸி ராஜாவுக்கும் முன்பே விடுதலைப் போராட்டத்தை படைகொண்டு நடத்திய மன்னர்களும் வீரர்களும் தமிழகத்தில் இருந்தார்கள். பூலித்தேவனும், மருது சகோதரர்களும்தான் அவர்கள். இந்த வரலாற்றைத் திரிக்கிறார்கள் மலையாளத் திரையுலகினர். இத்தனைக்கும் நடிகர் சங்கத் தலைவர் சரத்குமாரும் நடிக்கும் ஒரு படத்தில் என பேசப்பட்டு வந்தது. தமிழ் உணர்வாளர்கள் சிலர் இந்தப் படத்துக்கு எதிராக கடும் அறிக்கைகளும் வெளியிட்டு வந்தனர்.
இதுகுறித்து இரு செய்திகளை தட்ஸ்தமிழ் ஏற்கெனவே வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில், எதற்கு வம்பு என்று யோசித்தார்களோ என்னமோ... பழஸி ராஜாதான் முதல் சுதந்திரப் போராட்ட வீரர் என்று நாங்கள் கூறவில்லை. முதல் சுதந்திர முழக்கமிட்ட மன்னர்களில் அவரும் ஒருவர் என்றுதான் சித்தரித்துள்ளோம் என படத்தின் நாயகன் மம்முட்டியை விட்டே கூறவைத்துள்ளனர்.
இன்னொரு விஷயம்... இந்தப் படத்துக்காக சமீபத்தில் ஒரு இணையதளம் திறந்திருக்கிறார் தயாரிப்பாளர். இந்த இணைய தள திறப்பு விழா நிகழ்ச்சியை நடத்தியவர்கள், 'கட்டாயம் இணையதள செய்தியாளர்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வரக்கூடாது' என தடைவிதித்திருந்தனர். ஆனால் நிகழ்ச்சி நடந்த மாலையே, அது குறித்த புகைப்படங்களையும் செய்திகளையும் இணையதள நிருபர்களின் மின்னஞ்சல் முகவரிகளைத் தேடித் தேடி அனுப்பி வைத்திருந்தனர்!!
என்ன கொடுமை சரத்குமார்!


Click it and Unblock the Notifications











