வெண்ணிலா கபடிக் குழு - சூப்பர் ஸ்டார் ரஜினி புகழாரம்

By Staff

Rajini praises Vennila Kabadi Kuzhu team
சமீபத்திய படங்களில் வித்தியாசமானது எனப் புகழப்படும் வெண்ணிலா கபடிக் குழுவின் சிறப்புக் காட்சியைப் பார்த்து ரசித்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

பொதுவாக சிறப்பான படங்கள், அன்றைக்கு அதிகமாகப் பேசப்படுகிற படங்களை உடனுக்குடன் பார்த்து, தன்னை அப்டேட் செய்து கொள்வதுடன், புதிய இளைஞர்களையும் பாராட்டுவது ரஜினியின் வழக்கம்.

பத்தாண்டுகளுக்கு முன் இயக்குநர் சேரன் எடுத்த பொற்காலத்தைப் பாராட்டி, தனது படவிழா ஒன்றில் அவருக்கு 5 பவுன் தங்கச் சங்கிலி அணிவித்து தனது பாராட்டுக்களைத் தெரிவித்தவர் ரஜினி. இதுபோல பல திறமையான இளைஞர்கள் ரஜினியின் மேடையில் பாராட்டு பெற்றுள்ளனர்.

போன வாரம் ரிலீஸாகி, விமர்சகர்களிடம் நல்ல பெயரை வாங்கியிருந்தது வெண்ணிலா கபடிக் குழு திரைப்படம். இந்தியில் லகான் போல, தமிழில் விளையாட்டை, அதுவும் தமிழர் விளையாட்டான கபடியை மையப்படுத்தி இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

விஷயம் கேள்விப்பட்ட ரஜினி, படத்தைப் பார்க்க விருப்பம் தெரிவித்திருந்தாராம். அதே போல இந்தப் படத்தை உருவாக்கிய இளைஞர்களும் ரஜினி தங்கள் படத்தைப் பார்த்து வாழ்த்தினால் பெரிய அளவில் பேசப்படும் என விரும்பினர்.

அவர்களின் விருப்பத்துக்கேற்ப நேற்று, சென்னை போர்பிரேம்ஸ் திரையரங்கில் வெண்ணிலா கபடிக் குழு படம் பார்த்தார் ரஜினி.

படத்தை மிகவும் ரசித்துப் பார்த்த ரஜினி, 'நல்ல படம்... நிஜமாகவே புதிய முயற்சி. எனக்கு மிகவும் பிடிச்சிருந்தது. குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸ் பொருத்தமாக இருந்தது. வெற்றி மட்டுமல்ல, விருதுகளையும் குவிக்கும் என்று பாராட்டிய ரஜினி, அந்தக் காட்சிக்கு வந்திருந்த லட்சுமணன், இசையமைப்பாளர் செல்வ கணேஷ் ஆகியோரை வாழ்த்தினார்.

ரஜினி எங்கள் படத்தைப் பார்க்க வருவார் என நம்பவே இல்லை என்றும், அவரிடம் பாராட்டுப் பெற்றது விருதுக்குச் சமம் என்றும் தெரிவித்தார் படத்தின் தயாரிப்பாளர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X