twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    பெருகும் குடிகாரர்கள்-சிவகுமார் வேதனை

    By Staff
    |

    Surya, Sivakumar and Karthi
    அரசு கஜானா நிரம்ப வேண்டும் என்பதற்காக மக்களைக் குடிகார்ர்களாக்கிவிட்டதே அரசு என வேதனை தெரிவித்துள்ளார் நடிகர் சிவக்குமார்.

    திருப்பூரில், ஆழியாறு திருக்கோயில் நிறுவனர் வேதாத்ரி மகரிஷியின் மனைவி லோகாம்பாளின் 94 வது பிறந்த நாள், மனைவி நல வேட்பு நாளாக மனவளக்கலை மன்றத்தில் நடத்தப்பட்டது.

    இதில் 1008 தம்பதிகள் கலந்து கொண்டு மாலை மாற்றிக் கொண்டு ஒற்றுமையாக வாழ உறுதி எடுத்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் தனது மனைவி லட்சுமியுடன் கலந்து கொண்டார்.

    அவர் பேசியதாவது:

    பெண் என்பவள் சிறுமியாக இருக்கும் போது பெற்றோர் பாதுகாப்பில் வாழ்கிறாள். திருமணத்திற்கு பின்பு கணவன் பாதுகாப்பில் வாழ்கிறார். இதனால் பெண்கள் கூண்டு கிளியாகவே வாழ வேண்டிய நிர்ப்பந்தம்.

    பெண்களே ஆண்களை இறுதி வரை போற்றி பாதுகாக்கின்றனர். நான் தனிமையை விரும்புவன். எனது உடலும் உயிரும்தான் நண்பர்கள்.

    நான் அசைவம் சாப்பிடுவதை 1988 ம் ஆண்டு முதல் நிறுத்திவிட்டேன். காரணம், உயிர் கொலை கூடாது என்பது என் கருத்து. அதைப்போல எனக்கு மதுப் பழக்கமும், புகைப் பிடிக்கும் பழக்கமும் எப்போதும் கிடையாது.

    கஜனா நிரம்ப வேண்டும் என்பதற்காக குடி மக்களை குடிகார மக்களாக்கிவிட்டது அரசு. தாய், மனைவி, மகள் மீது ஆணையாக நான் மது குடிக்கமாட்டேன் என்று உறுதி எடுத்துக் கொள்ள வேண்டும்.

    பெற்ற தாய், கட்டிய மனைவி ஆகியோரை நாம் தெய்வமாக போற்றி பாதுகாக்க வேண்டும். பணமும் புகழும் நிரந்தரம் அல்ல. போகும்போது எதையும் எடுத்துச் செல்ல முடியாது.

    உழைத்து சம்பாதித்த பணத்தை மற்றவர்களுக்கும் கொடுத்து உதவ வேண்டும் என்றார் சிவக்குமார்.

    இந்த நிகழ்ச்சியில் தொழில் அதிபர்கள், ஆன்மீக அன்பர்கள், மனவளக்கலை மன்றத்தினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X