'சைஸ் ஜீரோ' நல்லதல்ல-'யோகா' ஷில்பா

By Staff

Shilpa Shetty
ஒல்லிப்பிச்சான் உடம்பாக இருக்க வேண்டும் என நினைப்பது ஆரோக்கியமானதல்ல, மாறாக ஆபத்தானது என்று கூறுகிறார் நடிகை ஷில்பா ஷெட்டி.

ஐஸ்வர்யா ராய் முதல் பிரியங்கா சோப்ரா வரை, பிபாஷா பாசு முதல் கரீனா கபூர் வரை சிக் உடம்புடன், ஒல்லியான உடல் வாகுடன் இருப்பதையே விரும்புகிறார்கள். மாடல் அழகிகளும் கூட ஸ்லிம்மாக இருக்கவே விரும்புகிறார்கள்.

ஆனால் இதெல்லாம் உடம்புக்கு நல்லதல்ல, ஆரோக்கியத்திற்கு கேடானது என்கிறார் யோகா டீச்சராக புது அவதாரம் எடுத்துள்ள ஷில்பா ஷெட்டி.

ஷில்பா ஷெட்டி யோகாசனம் குறித்த விளக்க வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. ஷில்பாஸ் யோகா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வீடியோ டெல்லியில் சமீபத்தில் வெளியிடப்பட்டது.

நிகழ்ச்சியில் பேசியபோதுதான் மேற்கண்ட அட்வைஸை வழங்கினார் ஷில்பா. இதுகுறித்து ஷில்பா கூறுகையில், ஒல்லிப்பிச்சான் உடம்பாக இருக்க பலரும் ஆசைப்படுகிறார்கள். அப்படி இருந்தால்தான் அழகு என்றும் நினைக்கிறார்கள். ஆனால் அது முற்றிலும் தவறான கருத்தாகும்.

நான் சைஸ் ஜீரோவாக இருக்கிறேன் என்று யாராவது கூறினால் அவர்களுக்கு ஆபத்து காத்திருக்கிறது என்றுதான் பொருள்.

அதேபோல யாராவது ஒல்லியாக இருந்தால் அவர்களைப் பார்த்து ஸ்லிம்மாக, அழகாக இருக்கிறீர்கள் என்று பாராட்டாதீர்கள். மாறாக, உடம்பை பார்த்துக் கொள்ளுங்கள் என்று அட்வைஸ் செய்ய வேண்டும்.

நான் சைஸ் ஜீரோ கிடையாது, சைஸ் 8 ஆக வேண்டுமானால் இருக்கலாம். கண்டிப்பாக சைஸ் ஜீரோவை நான் விரும்ப மாட்டேன்.

கரீனாவை பலரும் சைஸ் ஜீரோவை எட்டி விட்டதாக கூறுகிறார்கள். நான் அப்படி நினைக்கவில்லை. அவர் சைஸ் 4 அல்லது சைஸ் 5 ஆக இருக்கக் கூடும்.

உடம்பு ஸ்லிம்மாக அழகாக இருக்க வேண்டும் என்றால் வயிற்றைக் காயப் போடத் தேவையில்லை. ஆரோக்கியமான, சத்தான ஆகாரம் உட்கொண்டால் போதும். அதேசமயம், சரியான நேரத்தில் சாப்பிட வேண்டும். நன்றாக சாப்பிடுங்கள், நன்றாக வேலை பாருங்கள் என்பதுதான் எனது பாலிசி.

எனது யோகாசன விளக்க வீடியோ, கேரளாவின் எழில்கொஞ்சும் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையை இலக்காக வைத்து இது தயாரிக்கப்பட்டுள்ளது.

யோகாசனம் இந்தியாவின் கண்டுபிடிப்பு. ஆனால் வெளிநாடுகளில் இந்தியர்களின் யோகா வீடியோக்கள் கிடைப்பதில்லை. மாறாக, வெளிநாட்டவர்களின் யோகா விளக்க வீடியோக்கள்தான் நிறைய உள்ளன. இது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அதன் விளைவே இந்த வீடியோ.

இந்த வீடியோவில் நடித்த அனுபவத்தால் நானே இப்போது தீவிர யோகாசன விசிறியாகி விட்டேன். யோகாசனம் எனக்கு மன மகிழ்ச்சியையும், ஆரோக்கியத்தையும், நிம்மதியையும் தருகிறது.

அலைபாயும் மனதுக்கு கடிவாளம் போடுகிறது யோகா. அதேபோல நமது ஆத்மாவுக்கு நிம்மதியான உணர்வைத் தருகிறது. நமது உடல், மனம், ஆத்மா ஆகிய மூன்றிலுமே இது பரவசமான மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

எனது வாழ்க்கையில் யோகாசனம் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்று கண்டிப்பாக சொல்வேன் என்றார் ஷில்பா.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X