பம்மல் கே. சில்வஸ்டர் ஸ்டெலோன்!

By Staff

Sylvester with kareena
கமல்ஹாசன்- சிம்ரன் நடித்த தமிழ்ப் படமான பம்மல் கே சம்பந்தம் இப்போது இந்தியில் தயாராகிறது, அக்ஷய் குமார் நடிப்பில்.

2002ல் வெளியான பம்மல் கே சம்பந்தம் நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்பட்ட படமாகும். பிஎல் தேனப்பன் தயாரிக்க மவுலி இயக்கியிருந்தார். தமிழில் பெரும் வெற்றி என்று சொல்ல முடியாவிட்டாலும் முதலுக்கு மோசமில்லாமல் ஒடிய வகையில், கமலின் வெற்றிப் பட வரிசையில் இடம் பெற்றது பம்மல் கே சம்பந்தம்.

அந்தப் படத்தில் ஸ்டன்ட்மேனாக வரும் கமல் பேசும் சென்னை பாஷையும், தனது நண்பர்களுடன் அவர் அடிக்கும் லூட்டியும் வயிறுகுலுங்க சிரிக்க வைத்தன. சினேகா-அப்பாஸும் இந்தப் படத்தில் நடித்திருந்தனர்.

இந்தக் கதையில் ஒரே ஒரு மாறுதல் மட்டும் செய்து 'கம்பக்த் இஷ்க்' என்ற பெயரில் இந்தியில் எடுக்கிறார் சஜித் நாடியாவாலா. சபீர் கான் இயக்கும் இந்தப் படத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார். அவருக்கு ஜோடி கரீனா கபூர். சிம்ரன் ஏற்ற டாக்டர் வேடத்துக்கு மாற்றாக இவர் விளம்பர மாடலாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் இன்னொரு மெகா சிறப்பு உள்ளது.

அது பிரபல ஹாலிவுட் சூப்பர்ஸ்டார் சில்வஸ்டர் ஸ்டெலோன் இந்தப் படத்தில் கெளரவ வேடத்தில் நடிப்பது. பம்மல் கே சம்மந்தத்தில் கமல் கோலிவுட் ஸ்டன்ட்மேனாக வருவார். ஆனால் அக்ஷய் குமாரோ, ஹாலிவுட் ஸ்டன்ட்மேனாக வருகிறார்.

எனவே அந்த கேரக்டரின் நம்பகத் தன்மையை அதிகரிப்பதற்காக ஒரு சில காட்சிகளில் ஸ்டெலோனை நடிக்க வைக்கிறார்களாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X