கரீனா, ஷாஹித் தற்போது ஹாய் ஹாய் பிரண்ட்ஸ்
இப்போது கரீனாவும், ஷாஹித்தும் நண்பர்கள்: பிலிம்பேர் விழாவில் பேசிக் கொண்டனர்
ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்து பின்னர் காலத்தின் கோலத்தால், பிரிந்துவிட்ட கரீனாவும், ஷாஹீத் கபூரும் போனது போகட்டும் என்று தற்போது நண்பர்களாகி விட்டனர். அன்மையில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் இருவரும் முகம் கொடுத்து பேசிக் கொண்டனர்.
காதலிலிருந்து பிரிந்து வந்த பின்னர் கரீனா கபூரும், ஷாஹீத் கபூரும் விருது வழங்கும் விழாக்களிலோ அல்லது பொது நிகழச்சிகளிலோ ஒருவரையொருவர் கண்டும் காணாததுமாகச் செல்வது வழக்கம். ஆனால் தற்போது அன்மையில் நடந்த பிலிம்பேர் விருது விழாவில் இருவரும் கலந்து கொண்டனர்.
வழக்கும் போல் முகத்தை திருப்பிக் கொண்டு போவார்கள் என்று நினைத்தால் நீண்ட நாள் நண்பர்களைப் போல் அரட்டை அடிக்க ஆரம்பித்துவிட்டனர்.
பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் நடனம் ஆடிவிட்டு வரும்போது ஷாருக்கும், ஷாஹீதும் பேசிக் கொண்டிருப்பதை கரீனா பார்த்தார். அவர்களைப் பார்க்காதது போல் போவார் என்று நினைத்தால் அவர்களுக்கு ஒரு ஹாய் சொல்லி பேச ஆரம்பித்துவிட்டார்.
கரீனா தானாக வந்து பேசியது ஷாஹீத்துக்கு ஒரே ஆச்சரியமாக இருந்ததாம். அவர்கள் இருவரும் பேசிக் கொண்டது உண்மை தான் என்று சைப் அலி கான் உறுதிபடுத்தியுள்ளார். இவர்தான் இப்போதைக்கு கரீனாவின் காதலர் என்பது குறிப்பிடத்தக்கது.
நடந்ததை மறப்போம், நடப்பதை நினைப்போம் என்று நினைத்துவிட்டார்கள் போலும்.


Click it and Unblock the Notifications











