இயக்குநர் ரவிக்குமார் வீட்டில் திருட்டு முயற்சி - 3 பேர் கைது

சென்னை பெரும்பாக்கம் அருகே உள்ள நூக்கம்பாளையத்தில் ரவிக்குமாருக்கு சொந்தமான வீடு உள்ளது.
இங்கு நேற்று நுழைந்த சிலர் அங்கிருந்த இரும்புக் கதவை கழற்றி எடுத்துச் செல்ல முயன்றனர். இதைப் பார்த்த பொதுமக்கள் 3 பேரையும் சுற்றி வளைத்துப் பிடித்தனர். பின்னர் அவர்கள் பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
மூன்று பேரும் செம்மஞ்சேரியைச் சேர்ந்தவர்களாவர். அவர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











