ஷாங்காய் விழாவில் 'அச்சமுண்டு'!

ஏற்கனவே 'கார்டன் ஸ்டேட்' திரைப்பட விழாவில் 'ஹோம் குரோன்' விருது வாங்கிய இந்தப் படம், இப்போது சீனாவில் நடக்கும் ஷாங்காய் திரைப்பட விழாவிலும் பங்கேற்கிறது. ஸ்லம்டாக் மில்லியனேர் படத்தின் இயக்குநர் டேனி பாய்ல் இந்த விழாவின் நடுவராக செயல்படுகிறார்.
பிராஜெக்ட் ஈஸ்ட் வெஸ்ட் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க அமெரிக்காவிலேயே தயாராகியுள்ளது. பிரசன்னா, சினேகா, அமெரிக்க நடிகர் ஜான் ஷே நடிக்க, அருண் வைத்யநாதன் எழுதி இயக்கியுள்ளார்.
சர்வதேச அளவில் ஷாங்காய் திரைப்பட விழா மிகப் புகழ் பெற்றது. பனோரமா பிரிவில் உலகம் முழுவதிலுமிருந்து 70 படங்கள் மட்டுமே தேர்வு செய்யப்படும்.
ஜூன் 13 ஆம் தேதியிலிருந்து 21 ஆம் தேதி வரை சீனாவின் ஷாங்காய் நகரில் நடைபெறும் இந்த விழாவில், படத்தின் தயாரிப்பாளர்கள் ஆனந்த் கோவிந்தன், ஆஸ்மா ஹாஷ்மி, ரம்ஜான் லகானி, சீனிவாசன் பெருமாள் மற்றும் இயக்குநர் அருண் வைத்யநாதன் ஆகியோர் பங்கேற்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











