தெலுங்கு தேசத்தில் ஐக்கியமான நடிகை கவிதா!

ஏராளமான தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடப் படங்களில் கதாநாயகியாக நடித்தவர் கவிதா. இப்போதும் அக்கா, அண்ணி, அம்மா வேடங்களில் நிறைய படங்களில் வருகிறார்.
நேற்று திடீரென்று இவர் ஐதராபாத்தில் உள்ள தெலுங்கு தேசம் கட்சி அலுவலகம் சென்றார். அங்கு கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு தலைமையில் தன்னை தெலுங்கு தேசத்தில் இணைத்துக் கொள்வதாக அறிவித்தார்.
பின்னர் நிருபர்களிடம் கூறுகையில், எனக்கு மறைந்த அண்ணாகாரு என்டிஆரை நன்கு தெரியும். கட்சி தொடங்கிய உடனே என்னத்தான் முதலில் சேருமாறு அழைத்தார். அன்றைக்கு தெலுங்கில் நான் முன்னணி நடிகை. ஆனால் சின்ன வயசு என்பதால் இப்போது வேண்டாமே என்று கூறினேன். அவரும் ஏற்றுக் கொண்டு, பின்னர் சேரும்படி கூறியிருந்தார்.
அதை இத்தனை ஆண்டுகள் கழித்துதான் நிறைவேற்றியுள்ளேன்... இனி கட்சியின் வளர்ச்சிக்காக என் பாப்புலாரிட்டியைப் பயன்படுத்தப் போகிறேன், என்றார்.
கவிதா கட்சியில் இணைந்ததை மகளிர் அணித் தலைவி ரோஜா வரவேற்றுள்ளார். கவிதாவுக்கு மாநில அளவில் புதிய பொறுப்பு தர சந்திரபாபு நாயுடு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications